NFGGயின் மற்றுமொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கபுறடி வீதிச் சந்தியில் இடம்பெற்றது

shiblyகாத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஏற்பாடு செய்திருந்த மற்றுமொரு பிரச்சாரக் கூட்டம் நேற்று கபுறடி வீதி சந்தியில் இடம்பெற்றது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் பலுளுள் ஹாக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் NFGGயின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், NFGGயின் பொதுச் செயலாளர் MR.நஜா முஹம்மத்,

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட 5ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக், NFGGயின் தலைமைத்துவசபை உறுப்பினர் மௌலவி முஹம்மது றிஸ்மி (காசிமி), NFGGயின் இளைஞர் அணி உறுப்பினர் MM.நௌசாத், SLMCயின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர் இல்மி அஹமத் லெப்பை ஆகியோர் உரையாற்றினார்கள்.

shibly

நிகழ்வில் NFGG, SLMC ஆகியவற்றின் உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

rahuman

meeting

Published by

One response to “NFGGயின் மற்றுமொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கபுறடி வீதிச் சந்தியில் இடம்பெற்றது”

  1. Same spectators are in all meeting

Leave a comment