ரெயூனியோன் தீவில் புதிதாக கரையொதுங்கியது ஒரு உலோகத் துண்டு

planeகோலாலம்பூர்: இந்தியப் பெருங்கடலில் உள்ள ரெயூனியோன் தீவுகளில் மேலும் ஒரு உலோக துண்டு கரையொதுங்கியுள்ளது.காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடியதாக நம்பப்படும் விமான இறக்கை ஒன்றின் பாகம் கரையொதுங்கிய அதே கடற்கரையில் இந்த துண்டும் கரையொதுங்கியுள்ளது.ஆனாலும் இந்த துண்டை தடயமாக கருதிக் கையாளவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட அந்த விமான இறக்கைப் பாகம் ஆய்வுக்காக ஃபிரான்ஸுக்கு கொண்டுசெல்லப்பட்டதுபோல இந்த துண்டு கொண்டுசெல்லப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கிடைத்துள்ள துண்டில் சீன எழுத்துகளும் திசை குறிப்புகள் என்று கருதப்படக்கூடிய சில குறிகளும் உள்ளன.

plane

முன்னதாக கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கை பாகம், ஒரு போயிங் 777 ரக விமானத்தினுடையது என்று தற்போது உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யபப்ட்டுள்ளது என மலேசிய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.காணாமல்போன எம் ஹெச் 370 இந்த ரக விமானம்தான்.

Published by

Leave a comment