காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்ற பாலர் கலைவிழா

kids– எம். எச். எம். அன்வர்

காத்தான்குடி: பெண்களுக்கும் வலுவூட்டலுக்குமான அமைப்பின் பணிப்பாளர் சல்மா அமீர் ஹம்ஸா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 பாலர்பாடசாலையில் கற்கும் 580 மாணவர்கள் மற்றும் கற்பித்த 110 ஆசிரியர்களுக்கும் சமூக சேவை செய்த முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வின்போது நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பிரதம அதிதியாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம் எஸ் சுபைர், முன்னாள் நகர சபை தவிசாளர் எஸ் எச் அஸ்பர், அமேரிக்க நிலைய கலாச்சார விவகார உத்தியோகத்தர் டொன் கோடெல் ,முன்னாள் நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜீத், முன்னாள் பிரதேச கல்விப்பணிப்பாளர் ஏ எம் சுபைர் சமூக சேவையாளர் எம் ஹாரிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேற்படி பாலர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

kids

hizbullah

salma

Published by

One response to “காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்ற பாலர் கலைவிழா”

Leave a comment