காத்தான்குடி பள்ளி வாயல்கள் படுகொலைகள் நடந்து (03.08.2015) 25 ஆண்டுகளை கடக்கும் முகமாக இக் கவிதை பிரசுமாகிறது..!
இயற்கை கொண்ட…
இருண்ட இரவு…
செயற்கையால் மனித குருதியால்
சிவப்பு இரவாய் 1990.08.03 மாறியது அன்று…
இன்றோடு 25 ஆண்டுகளைக் கடந்து தவிக்கின்றோம்..!
பாசிசம் தேடி…
வேட்டையாடிய காபிர்கள்
வெள்ளை உடை அணிந்து
கோழைத்தனமாய் பின்னாலே…
துப்பாக்கி வேட்டுக்களைப் பொறித்து…
முஃமீன்களான மனித
உயிர்களைப் பறித்தார்கள்..!
இஸ்லாத்தின் கடமையை…
நிறைவேற்றி நின்ற…
வெள்ளை ரோஜாக்கள் நீங்கள்…
உங்கள் குருதியாலேயே…
சிவப்பு ரோஜாவாக்கிய மிருகங்களான…
காபிர்கள் அவர்கள்..!
இறையில்லங்களில்…
இரத்த வெள்ளங்கள் அன்று…
அவ் இல்லங்களில்…
மாறாய் தடங்களாய்…
துப்பாக்கி துளைகள்
இனி என்றும்..!
ஐய்யறிவு கொன்ட…
மிருகங்கள் கூட…
அழுதது…
மனிதனையே மனிதன்
கொன்றான் என்று..!
“காத்தநகர்”
உங்களை காக்க
தவறிவிட்டது அன்று…
இனி காப்போம் இந்த…
மண்ணில் உள்ள எல்லா…
உயிர்களையும் எண்ணி..!
தினந்தோறும்…
உங்களை நினைக்கும்
நாங்கள் வருடம் ஓர்…
நாள் உலகமறிய நீங்கள்…
ஷஹீதான நாளை…
துக்கதினமாக்குகின்றோம்…
அடுத்த சங்கதிகள் அறிவதற்காகவே..!
நிம்மதியான…
மறுவுலகில் நிம்மதியாய்…
தூங்குகின்றீர்கள் நீங்கள்.
பொருதிருங்கள்…
எல்லோரும் என்றோ…
உங்கள் இல்லம்
நாடி வருவோம்..!
“காத்தநகர் இளங்கவி”
அப்துல் கையூம்
Leave a comment