09வது நாடாளுமன்றத் தேர்தல் – 15.02.1989
த.ஐ.வி.கூட்டணி – 55,131 வாக்குகள்,
சுயேட்சை (ஈரோஸ்) – 46,419 வாக்குகள்,
ஸ்ரீ.ல.மு.கா – 36,867 வாக்குகள்,
ஐ.தே.கட்சி – 11,347 வாக்குகள்
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 216,574
அளிக்கப்பட்ட வாக்குகள்: 169,284 (78.16%)இதனடிப்படையில் த.ஐ.வி.முன்னணி மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 5மூத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்த மேற்படி 4 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 149,764 வாக்குகளை எஞ்சியுள்ள 4 ஆசனங்களைப் பங்கிடுவதற்காகப் பிரித்தபோது ஒரு ஆசனத்திற்காகத் தேவைப்பட்ட வாக்குகளின் தொகை 37,441 வாக்குகளாகும்.
அதன்படி த.ஐ.வி.முன்னணியின் 55,131 வாக்குகளில் 2வது ஆசனத்திற்கான 37,441 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 17,690 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
அடுத்து, சுயேட்சைக்குழுவின் 46,419 வாக்குகளில் 3வது ஆசனத்திற்காக 37,441 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக அக்குழுவிடம் 8,978 வாக்குகள் இருந்தன.
4ம், 5ம் ஆசனங்களுக்காக எந்தக் கட்சிகளிடமும் 37,441 வாக்குகள் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்த கட்சிகளில் 36,867 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீ.ல.மு.கா.வுக்கு 4வது ஆசனமும், அதற்கடுத்த நிலையில் 17,690 மீதி வாக்குகளைக் கொண்டிருந்த த.ஐ.வி.முன்னணிக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.ஐ.வி.கூட்டணியைச் சேர்ந்த 25,651 விருப்பு வாக்குகள் பெற்ற கோ. கருணாகரம், 21,959 விருப்பு வாக்குகள் பெற்ற பிறின்ஸ் காசிநாதர், 19,431 விருப்பு வாக்குகள் பெற்ற சாம். தம்பிமுத்து, ஈரோஸ் சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த 22,889 விருப்பு வாக்குகள் பெற்ற ஏ. குணசீலன், ‘.ல.மு.கா.வைச் சேர்ந்த 15,832 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களில் 07.05.1990ல் சாம். தம்பிமுத்து படுகொலை செய்யப்பட்டதால் ஜோஸப் பரராஜசிங்கம் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டார். ஈரோஸ் சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த தமிழ் வேட்பாளர்கள் இலங்கையின் ஒற்றையாட்சியை வலியுறுத்தும் அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்ததன் காரணமாக அக்குழுவின் வேட்பாளர் பட்டியலில் இறுதி வேட்பாளராக இடம்பெற்றிருந்த பஷீர் சேகுதாவூத் அவ்வியக்கத்தின் பிரிவினைப் போராட்டக் கொள்கையைக் கைவிட்டு இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு சத்தியப்பிரமாணம் செய்து நாடாளுமன்ற உறுப்பினரானார்.
10வது நாடாளுமன்றத் தேர்தல் – 16.08.1994
த.ஐ.வி.கூட்டணி – 76,516 வாக்குகள்,
ஸ்ரீ.ல.மு.கா – 31,072 வாக்குகள்,
ஐ.தே.கட்சி – 23,244 வாக்குகள்
பொ.ஐ.முன்னணி – 19,278 வாக்குகள்
ரெலோ – 17,073 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 261,898
அளிக்கப்பட்ட வாக்குகள்: 189,619 (72.40%)இதனடிப்படையில் த.ஐ.வி.முன்னணி மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 5மூத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்த மேற்படி 5 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 167,183 வாக்குகளை எஞ்சியுள்ள 4 ஆசனங்களுக்காகப் பிரித்தபோது, ஒரு ஆசனத்திற்காகத் தேவைப்பட்ட வாக்குகளின் தொகை 41,795 வாக்குகளாகும்.
அதன்படி த.ஐ.வி.முன்னணியின் 76,516 வாக்குகளில் 2வது ஆசனத்திற்கான 41,795 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 34,721 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
3ம், 4ம், 5ம் ஆசனங்களுக்காக இப்போது எந்தக் கட்சிகளிடமும் 41,795 வாக்குகள் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 34,721 மீதி வாக்குகளைக் கொண்டிருந்த த.ஐ.வி.முன்னணிக்கு 3வது ஆசனமும், அதற்கடுத்த நிலையில் 31,072 வாக்குகளைப் பெற்றிருந்த ‘.ல.மு.காவுக்கு 4வது ஆசனமும், 23,244 வாக்குகளைப் பெற்றிருந்த ஐ.தே.கட்சிக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.ஐ.வி.கூட்டணியைச் சேர்ந்த 43,350 விருப்பு வாக்குகள் பெற்ற ஜோஸப் பரராஜசிங்கம், 17,450 விருப்பு வாக்குகள் பெற்ற பொன். செல்வராசா, 15,974 விருப்பு வாக்குகள் பெற்ற கே. துரைராஜசிங்கம், ‘.ல.மு.கா.வைச் சேர்ந்த 12,583 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 11,508 விருப்பு வாக்குகள் பெற்ற அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
11வது நாடாளுமன்றத் தேர்தல் – 10.10.2000
த.ஐ.வி.கூட்டணி – 54,448 வாக்குகள்,
நுஆ – 53,646 வாக்குகள்,
ஐ.தே.கட்சி – 29,165 வாக்குகள்,
பொ.ஐ. முன்னணி – 16,510 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 275,485,
அளிக்கப்பட்ட வாக்குகள்: 197,646 (71.74%)இதனடிப்படையில் த.ஐ.வி.முன்னணி மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 5மூத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்த மேற்படி 4 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 153,769 வாக்குகளை எஞ்சியுள்ள 4 ஆசனங்களைப் பங்கிடுவதற்காகப் பிரித்தபோது ஒரு ஆசனத்திற்காகத் தேவைப்பட்ட வாக்குகளின் தொகை 38,442 வாக்குகளாகும்.
அதன்படி த.ஐ.வி.முன்னணியின் 54,448 வாக்குகளில் 2வது ஆசனத்திற்கான 38,442 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 16,006 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
அடுத்து, நுஆ கட்சியின் 53,646 வாக்குகளில் 3வது ஆசனத்திற்காக 38,442 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக அக்கட்சியிடம் 15,204 வாக்குகள் இருந்தன.
4ம், 5ம் ஆசனங்களுக்காக 38,442 வாக்குகள் இப்போது எந்தக் கட்சிகளிடமும் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 29,165 வாக்குகளைப் பெற்ற ஐ.தே.கட்சிக்கு 4வது ஆசனமும், 16,510 வாக்குகளைப் பெற்றிருந்த பொதுசன ஐக்கிய முன்னணிக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.ஐ.வி.கூட்டணியைச் சேர்ந்த 16,542 விருப்பு வாக்குகள் பெற்ற நிமலன் சௌந்திரநாயகம், 12,605 விருப்பு வாக்குகள் பெற்ற ஜோசப் பரராஜசிங்கம், நுஆ கட்சியைச் சேர்ந்த 22,975 விருப்பு வாக்குகள் பெற்ற முகைதீன் அப்துல் காதர், ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 14,284 விருப்பு வாக்குகள் பெற்ற அலிசாஹிர் மௌலானா, பொ.ஐ.முன்னணியைச் சேர்ந்த 9,132 வாக்குகள் பெற்ற எஸ். கணேசமூர்த்தி ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
12வது நாடாளுமன்றத் தேர்தல் – 05.12.2001
த.தே.கூட்டமைப்பு – 86,284 வாக்குகள்.
ஸ்ரீ.ல.மு.கா – 26,725 வாக்குகள்
பொ.ஐ. முன்னணி – 25,705 வாக்குகள்
ஐ.தே.கட்சி – 22,638 வாக்குகள், பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 282,079
அளிக்கப்பட்ட வாக்குகள்: 192,383 (68.20%)இதனடிப்படையில் த.தே.கூட்டமைப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
அளிக்கப்பட்ட வாக்குகளில் 5மூத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த மேற்படி 4 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 161,352 வாக்குகளை எஞ்சியுள்ள 4 ஆசனங்களுக்காகப் பிரித்தபோது, ஒரு ஆசனத்திற்காக 40,338 வாக்குகள் தேவைப்பட்டன.
அதன்படி த.தே.கூட்டமைப்பின் 86,284 வாக்குகளில் 2ம், 3ம் ஆசனங்களுக்காக 80,676 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 5,608 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.4ம், 5ம் ஆசனங்களுக்காக தலா 40,338 வாக்குகள் இப்போது எந்தக் கட்சிகளிடமும் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 26,725 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு 4வது ஆசனமும், 25,705 வாக்குகளைப் பெற்றிருந்த பொதுசன ஐக்கிய முன்னணிக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.ஐ.வி.கூட்டணியைச் சேர்ந்த 24,475 விருப்பு வாக்குகள் பெற்ற ரி. தங்கவடிவேல், 20,279 விருப்பு வாக்குகள் பெற்ற ஜோசப் பரராஜசிங்கம், 20,675 விருப்பு வாக்குகள் பெற்ற கிருஷ்ணப்பிள்ளை, பொ.ஐ. முன்னணியைச் சேர்ந்த 19,787 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஸ்ரீ.ல.மு.காங்கிரஸைச் சேர்ந்த 17,497 வாக்குகள் பெற்ற முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
13வது நாடாளுமன்றத் தேர்தல் – 02.04.2004
த.தே.கூட்டமைப்பு – 161,011 வாக்குகள்
ஸ்ரீ.ல.மு.கா – 43,131 வாக்குகள்
ஐ.ம.சு.கூட்டணி – 26,268 வாக்குகள்.
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 303,928
அளிக்கப்பட்ட வாக்குகள்: 254,023 (83.58ம%)இதனடிப்படையில் த.ஐ.வி.முன்னணி அதிகூடிய வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.
5மூத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்த மேற்படி 3 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 230,310 வாக்குகளை எஞ்சிய 4 ஆசனங்களுக்காகப் பிரித்தபோது, ஒரு ஆசனத்திற்கு 57,577 வாக்குகள் தேவைப்பட்டன.அதன்படி த.தே. கூட்டமைப்பின் 161,011 வாக்குகளில் 2ம், 3ம் ஆசனங்களுக்காக 115,154 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 45,857 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
4ம், 5ம் ஆசனங்களுக்காக தலா 57,577 வாக்குகள் இப்போது எந்தக் கட்சிகளிடமும் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 45,857 வாக்குகளைக் கொண்டிருந்த த.தே. கூட்டமைப்புக்கு 4வது ஆசனமும், 43,131 வாக்குகளைப் பெற்றிருந்த ஸ்ரீ.ல.மு.காவுக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த 57,843 விருப்பு வாக்குகள் பெற்ற கே. கனகசபை, 50,545 விருப்பு வாக்குகள் பெற்ற தங்கேஸ்வரி கதிர்காமன், 44,457 விருப்பு வாக்குகள் பெற்ற எஸ். ஜெயானந்தமூர்த்தி, 38,633 விருப்பு வாக்குகள் பெற்ற கிங்ஸ்லி இராசநாயகம், .ஸ்ரீல.மு.கா.வைச் சேர்ந்த 21,232 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.எஸ்.எஸ். அமீர்அலி ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
14வது நாடாளுமன்றத் தேர்தல் – 08.04.2010
த.தே.கூட்டமைப்பு – 66,235 வாக்குகள்
ஐ.ம.சு. முன்னணி – 62,009 வாக்குகள்
ஐ.தே.முன்னணி – 22,935 வாக்குகள்
த.ம.வி.புலிகள் – 16,886 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட வாக்குகள்: 333,644
அளிக்கப்பட்ட வாக்குகள்: 195,367 (58.56%)
இதனடிப்படையில் த.தே.கூட்டமைப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்றமைக்காக முதலாவது ஆசனம் வழங்கப்பட்டது.அளிக்கப்பட்ட வாக்குகளில் 5மூத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்ற மேற்படி 4 கட்சிகளும் பெற்றுக்கொண்ட 168,065 வாக்குகளை எஞ்சிய 4 ஆசனங்களுக்காகப் பிரித்தபோது ஒரு ஆசனத்திற்காகத் 42,016 வாக்குகள் தேவையாகின.
அதன்படி த.தே.கூட்டமைப்பின் 66,235 வாக்குகளில் 2வது ஆசனத்திற்கான 42,016 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 24,219 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.அடுத்து, ஐ.ம.சு. கூட்டமைப்பின் 62,009 வாக்குகளில் 3வது ஆசனத்திற்காக 42,016 வாக்குகள் கழிக்கப்பட்டு, மீதியாக 19,993 வாக்குகள் அக்கட்சியிடம் இருந்தன.
4ம், 5ம் ஆசனங்களுக்காக தலா 42,016 வாக்குகள் இப்போது எந்தக் கட்சிகளிடமும் இல்லாததால் அதற்கும் குறைவான வாக்குகளைக் கொண்டிருந்த கட்சிகளில் 24,219 மீதி வாக்குகளைக் கொண்டிருந்த த.தே.கூட்டமைப்புக்கே 4வது ஆசனமும், 22,935 வாக்குகளைப் பெற்றிருந்த ஐக்கிய தேசிய முன்னணிக்கு 5வது ஆசனமும் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் த.தே.கூட்டமைப்பைச் சேர்ந்த 20,569 விருப்பு வாக்குகள் பெற்ற எஸ். யோகேஸவரன், 18,485 விருப்பு வாக்குகள் பெற்ற பொன். செல்வாசா, 16,504 விருப்பு வாக்குகள் பெற்ற பி. அரியநேத்திரன், ஐ.ம.சு. கூட்டணியைச் சேர்ந்த 22,256 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த 11,678 விருப்பு வாக்குகள் பெற்ற பஷீர் சேகுதாவூத் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
17.08.2015ல் நடைபெறவுள்ள 15வது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவாகவுள்ள கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் விபரங்களை இன்னும் 15 தினங்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
Published by
![ballot_box1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/ballot_box11.jpg?w=150&h=113)
Leave a comment