குடியேறிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது ஐநா விமர்சனம்

immigrationலண்டன்: குடியேறிகளின் நெருக்கடியை கையாள ஐரோப்பிய ஒன்றியம் மேலும் சிறப்பாகச் செயற்பட வேண்டும் என்று ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.வந்துசேரும் அகதிகளை கையாள இத்தாலிக்கும், கிரேக்கத்துக்கும் உரிய உதவிகள் செய்யப்பட்டு, அவர்களை பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

குடியேறிகள் விரும்பி குடியேறும் இடமாக பிரிட்டன் இல்லை என்று கூறிய ஐநா பேச்சாளர், ஒரு வருடத்துக்கு பிரிட்டன் முப்பதினாயிரம் தஞ்சங்கோரிகளை மாத்திரம் ஏற்கின்றது என்றும், இது பிரான்ஸைவிட அரவாசிக்கும் குறைவாகவும், சுவீடனின் மூன்றில் ஒரு பங்காகவும், ஜேர்மனியின் ஐந்தில் ஒரு பங்காகவும் மாத்திரம் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரான்ஸில் தஞ்சக்கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க காலதாமதமாகுவதாலும், வேலைவாய்ப்புக்காகவுமே குடியேறிகள் பிரிட்டனுக்குள் நுழைய பகீரதப் பிரயத்தனம் செய்வதாகவும் அவர் கூறினார்.

Published by

Leave a comment