– மன்னாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா –
மன்னார்: எனது ஆட்சியில் சகல மதத்தளங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்துள்ளோம் என்று பிரதமர் ரணில் மன்னாரில் தெரிவித்தார்.
வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டதில் பிரதமர் ரணில் விக்ரம மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்-
மன்னார் நகரத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் எமது புதிய பாராளுமன்றம் அமைத்தும் ஆரம்பிக்கப்படும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய மன்னார் மாவட்டத்துக்கான சகல வதிகளும் கொண்ட விளையாட்டரங்கு.மற்றும் பிரதான கூட்ட மண்டபம் என்பன அமைப்பதற்கான அனுமதியினை வழங்கியுள்ளேன்.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவுக்கு அருகில் இருக்கும் பிரதான நகரமான மன்னார் பொருளாதார மத்திய இடமாக மாற்றவுள்ளோம்..இதன் மூலம் இந்த பிரதேசம் சுற்றுலாத்துறைக்கு பெயர்போன தளமாக மாறிவிடும்,
இந்த மாவட்டத்தில் அதிகமாக மீனவர்கள் இருக்கின்ற படியால்,மன்னார் நகரத்தில் மீனவ மத்திய நிலையம் அமைக்கப்படுவதுடன்,பணிக்கட்டி தொழிற்சாலையும் ஏற்படுத்தப்படவுள்ளதுடன்,தலைமைன்னாரில் பாரிய மீனவ துறைமுகம் ஒன்றையும் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது கூறினார்.
இந்த நிகழ்வில் ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,வேட்பாளர்களான முஹம்மத் கபூர்,தேசமான்ய எஹியான்,ராஜன் மார்க்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உட்பட பலரம் கலந்து கொண்டனர்.


Leave a comment