பாகிஸ்தான் சுன்னி ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுக்கொலை

Pakistan இஸ்லாமாபாத்: லக்ஷர் இ ஜாங்வி என்னும் சுன்னி ஆயுதக்குழுவின் தலைவரை தாம் சுட்டுக்கொன்றதாக பாகிஸ்தான் போலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம் கைது செய்யப்பட்ட மாலிக் இஷாக் என்னும் அந்த ஆயுதக்குழுவின் தலைவரை, பஞ்சாப் மாகாணத்தில், சிறை வாகன தொடரணி ஒன்றில் கொண்டு சென்ற போது, அவரை விடுவிக்கும் நோக்கில்

ஆயுதந்தாங்கிய குழுவினர் அதன் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தியதாக போலிஸார் கூறுகின்றனர்.

Pakistan

அந்த துப்பாக்கி மோதலில் இஷாக்கும் அவரது இரு மகன்களும் மேலும் 11 பேரும் கொல்லப்பட்டாதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

6 பொலிஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த லக்ஷர் இ ஜாங்வி அமைப்பு, பெரும்பாலும் சியாக்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களின் மரணத்துக்கு காரணமாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

Published by

Leave a comment