பஞ்சாப் தாக்குதல்: பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் கிடையாது!

india-v-pakistan-semi-final-mohali[1]டெல்லி: இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்பு இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நேற்று மூன்று தீவிரவாதிகள் நுழைந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் பொலிசார் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். பின்னர் பொலிஸ் மற்றும் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் பஞ்சாப் எல்லையில் உள்ள குர்தாஸ்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம், இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு பேரிடியாக அமைந்து விட்டது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலர் அனுராக் தாகூர் கூறுகையில்,‘‘இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பி.சி.சி.ஐ.யை முதலில் அணுகியது. நாங்களும் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

என்னை பொறுத்தவரை கிரிக்கெட் தொடரைவிட நாட்டு மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம். விளையாட்டு என்பது வேறு பிரச்சனையாக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது.

ஒரு இந்தியராக பார்க்கும் போது, மீண்டும் இரு நாடுகள் இடையே கிரிக்கெட் தொடர் நடக்க வாய்ப்பு இல்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் சூழலில் கிரிக்கெட் விளையாட முடியாது என்பதை பாகிஸ்தான் உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Published by

Leave a comment