காபூல்: தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஒமர் மரணமடைந்துவிட்டதாக ஆஃப்கன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆனால், தலிபான்கள் இது குறித்து எதையும் கூறவில்லை.
அவர் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பாக இறந்திருக்கலாம் என ஆஃப்கன் அரசு வட்டாரங்களும் புலனாய்வுத் துறை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
இது குறித்த மேலதிக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
தலிபான்களின் செய்தித் தொடர்பாளரை பிபிசி தொடர்புகொண்டபோது, இது குறித்து விரைவில் அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று கூறினார்.
முல்லா ஒமர் மரணமடைந்துவிட்டதாக இதற்கு முன்பும் பல முறை தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
Leave a comment