பஹ்ரைனில் வெடிகுண்டுத் தாக்குதல்: காவல்துறையினர் 2 பேர் பலி

bahrainமனாமா: பஹ்ரைன் தலைநகர் மனாமாவிற்குத் தெற்கில் நடந்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறையினர் இருவர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலானது சிட்ரா என்ற ஷியாக்களின் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் நான்கு வருடங்களுக்கு முன்பாக, சீர்த்திருத்தங்களை வலியுறுத்தியும் அரசாங்கத்தில் தங்களுக்குக் கூடுதல் அதிகாரங்களைக் கோரியும் ஷியாக்கள் மேற்கொண்ட மிகப் பெரிய போராட்டத்தை மேற்கொண்டனர்.

bahrain
2012இல் இடம்பெற்ற கலவரத்தின்போது…

அதற்குப் பிறகு, அங்கு அவ்வப்போது இம்மாதிரியான நிகழ்வுகள் அரங்கேறிவருகின்றன.

Published by

Leave a comment