எனது வீட்டில்
அப்பா
மரத்தை வரைந்தார்
அம்மா
இலையை வரைந்தாள்
அண்ணன்
மயிலை வரைந்தான்
அக்கா
பாம்பு வரைந்தாள்
தம்பி
வண்ணத்துப்பூச்சி வரைந்தான்
தங்கை
குதிரை வரைந்தாள்
நான்
யானை வரைந்தேன்
மனைவி
முயலை வரைந்தாள்
மகன்
மணி அடித்தான்
மகள் கையசைக்க
ஒருவர்
சைக்கிளில் வந்தார்
இன்னொருவர்
வீட்டுக்குள் புகுந்தார்
இவை எல்லாம் சேர்ந்து
திடீரென
இலங்கை பாராளமன்றம் உள்ளே
பெரும் காடு உருவானது
அதைப்பார்த்த அன்னமொன்று
அங்கே நின்று
பாலையும், நீரையும் தரம் பிரிக்குது !


Leave a comment