கண்டி மீரா மத்திய கல்லூரிக்கு மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி நிதி ஒதுக்கீடு

asadகண்டி: கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட மீரா மத்திய கல்லூரியின் அபிவிருத்தி மற்றும் இதர செலவுகளுக்காக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆசாத் சாலியினால் 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என கல்லூரியின் பழைய மாணவர்சங்கத்தின் தலைவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டருமான எச்.சிராஜூதீன் தெரிவித்தார்.

கல்லூரியன் பழைய மாணவர்சங்கம் மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலியிடம் விடுத்த வோண்டு கோளுக்கு அமைவாக இந்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

எதிர்வரும் காலங்கலில் கல்லூரியின் அபிவிருத்திக்கு தன்னால் ஆன முளு உதவியும் செய்து தருவதாக மாகாண சபை உறுப்பினர் ஆசாத் தெரிவித்தாகவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

– தகவல்: FM. பர்ஹான்

Published by

Leave a comment