காத்தான்குடி: அறிவுச் சூரியன் அணைந்து போனது என முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவு குறித்து காத்தான்குடி OSA அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெப்பை வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவதுஇ அறிவுப் பாதையில் இந்தியாவை வழி நாடாத்திய முதுபெரும் விஞ்ஞானியான அப்துல் கலாமின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது சிந்தனைகளும் நடத்தையும் இந்திய இளைஞர்களை வெகுவாக ஈர்த்திருந்ததோடு வெளிநாட்டவர்களும் இதனால் கவரப்பட்டு தமது வாழ்க்கை நெறியினை மாற்றிக்கொண்டிருந்தமை நோக்கத்தக்கதாகும்.
நான் ஒரு இந்தியத் தயாரிப்பு என பெருமையுடன் கூறிக்கொண்ட அவர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதிலும் பயிற்சி எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது இந்திய மக்கள் பெருமை கொள்ளத்தக்க விடயமாகும்.
அரசியல் தலைவராகஇ விஞ்ஞானியாகஇ எழுத்தாளராக மற்றும் விரிவுரையாளராக அவர் ஆற்றிய சேவைகள் மக்கள் மனதில் நின்று நிலைக்கும்.
இந்திய தேசத்திலிருந்து அறிவொளி பரப்பிய ஒரு அறிவுச் சூரியன் அணைந்து போனது. அவரது வழிகாட்டுதல்களையும் முன்மாதிரிகளையும் பின்பற்றி நமது கனவுகள் மெய்ப்பட உழைப்பதே அவருக்கு நம் காட்டும் நன்றிக் கடனாகும். எனவும் இல்மி அஹமட் லெப்பை தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a comment