– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
பாலமுனை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன இணைந்து நடாத்திய பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலான 3வது பிரச்சாரக் கூட்டம் நேற்று பாலமுனையில் இடம்பெற்றது.
NFGGயின் பலாமுனைப் பிரதேச செயற்குழு உறுப்பினர் சகோ, சியாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ALM.சபீல் (நளீமி), பிராந்திய தலைமைத்துவசபை உறுப்பினரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான AGM.ஹாறூன் மற்றும் பிராந்திய செயற்குழு உறுப்பினர்கள் உட்பட அல்ஹாஜ் மர்சூக அஹமத் லெப்பை, இல்மி அஹமத் லெப்பை உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியகுழு உறுப்பினர்கள், ஐ.தே.கவின் காத்தான்குடி அமைப்பாளர் அல்ஹாஜ் HMM.முஸ்தபா (ஜே.பி), ஐ.தே.கவின் மத்திய குழு செயலாளர் ALA.கையூம் (BA) மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட 5ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி) ஆகியோர் விஷேட உரையாற்றினார்கள்.
Published by



Leave a reply to mohamedrislan Cancel reply