கடந்த 03வது தொடரில் அலிசாஹிர் மௌலானா அவர்களையும், பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களையும் நான் சுருக்கமாக SLMCவின் 2015 தேர்தல் காலத் தங்க நகைக்கடையிலுள்ள ‘உரைகல்’லில் உரைத்துக்காட்டி அதில் முன்னவர் 20 கரட் தங்கம் எனவும், பின்னவர் 18 கரட்டும் இல்லாதவர் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
இதனைப் பார்வையிட்ட பல வாசகர்கள் உண்மையை துணிவுடன் உரைத்துக் காட்டியதற்காக என்னை பராட்டியும்,
சிலர், இப்படியெல்லாம் பொதுச் சேவைக்கு வருபவர்களை மோசமாகச் சித்தரித்துக் காட்டக்கூடாது, இவர்களை விட நீங்கள் நமதூரில் போட்டியிடும் ஹிஸ்புல்லாஹ், சட்டத்தரணி றூபி போன்றவர்களை வாக்காளர்களுக்கு உரைத்துக் காட்டலாம் என்றும் அவர்களது அபிப்பிராங்களைத் தெரிவித்திருந்தனர்.
அவர்களின் கருத்துக்களை வரவேற்கும் நான், இந்தத் தொடாரில் ளுடுஆஊ 10 Nகுபுபு அரசியற் கூட்டில் நமது மண்ணில் போட்டியிடுவோரைப் பற்றியே உரைத்து வருகின்றேன் என்பதையும், ஏனைய வேட்பாளர்களைப் பற்றி வேறாக எழுதி வருவதால் அவற்றை விரைவில் வேறு தலைப்புக்களில் இணையதளங்களில் வெளியாக்குவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இத்தொடரில் இருந்து SLMS + NFGG அரசியற் கூட்டில் இணைந்து போட்டியிடுகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றகுமான் அவர்களைப் பற்றி இங்கே உரைத்துப் பார்க்கலாம்.
இத்தொடரைப் படித்து வரும் வாசகர்களில் பெரும்பாலனவர்கள், ‘இவர் எப்படியும் அப்துர் றஹ்மான்தான் 22 கரட் தங்கம் என்று கடைசியில் சர்ட்பிக்கேட் கொடுப்பார். ஆதனால் இவரது உரைப்பில் நாம் நேரத்தைச் செலவழிக்கத் தேவையில்லை’ என்று இப்போதே தமக்குள் தீர்;மானம் கொண்டிருப்பார்கள். அதனால், இவ்வாறானவர்களுக்கு நான் எந்தவிதமாக அவரைப்பற்றி உரைத்துக் காட்டினாலும் அவர்களது சிந்தனையில், தீர்மானத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. எனினும், எனது பணியைத் தொடர்கின்றேன்.
அப்துர் றஹ்மான் அவர்களைப் பற்றி இங்கு நான் எடுத்துரைக்க முன்னர், எனக்கும் அவரது தலைமையிலான PMGG அல்லது NFGG அமைப்புக்களுக்கும் இடையில் பாரிய கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன என்பதையும் பதிவு செய்து கொள்கின்றேன்.
கடந்த மே மாதம் 30ம் திகதி காத்தான்குடி குட்வின் சந்தியில் நடைபெற்ற NFGGயின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் பேசும்போது, ‘எமது முன்னணியில் கருத்து வேறுபாடு கொண்டு விலகி நிற்கும் ஆதரவாளர்கள் எம்மோடு நேரடியாகக் கலந்துரையாடி ஒன்றிணைந்து இந்த மாவட்டத்திலும் ஆட்சியதிகாரத்திலுள்ள நமது பொது எதிரியைத் தோற்கடித்து மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.
அவரது இந்த அறைகூவல் அழைப்புக்கு PMGG அல்லது NFGG யில் இணைந்திருந்து, இரண்டாவது நகர சபை ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் நகர சபை உறுப்பினர்களாகப் பதவி வகித்த உறுப்பினர்களின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்து பரவலான என்னிடமும், பிறரிடமும் தமது விமர்சனங்களை முன்வைத்த எத்தனை PMGG அல்லது NFGG ஆதரவாளர்கள் தமது அதிருப்திகள் குறித்து நேரடியாகக் கலந்துரையாடி தெளிவுகளைப் பெற்றார்கள் என்பது எனக்குத் தெரியாது.
ஆனால் நான் அன்றிரவே எனது அதிருப்தியீனத்தைத் தெரிவித்து அவை தொடர்பில் தங்களுடன் பகிரங்கமாக கலந்துரையாடி தெளிவுகளைப் பெற விரும்புவதாகவும், அதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குமாறும் கேட்டு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்தேன். அது தொடர்பாக பல்வேறு இணையதளங்களிலும், அவர்களின் உத்தியோகபூர்வமான http://www.pmg.org இணையதளத்திலும் மறுநாள் 31ம் திகதி எனது வேண்டுகோள் வெளியானதை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.
எனினும், எனது அவ்வேண்டுகோள் குறித்து இன்று வரை எனக்கு சந்தர்ப்பங்கள் அவர்களால் தரப்படவில்லை. அதனால் நானும் இன்னமும் PMGG அல்லது NFGG என்கிற அவர்களின் சமூக அரசியல் அமைப்புக்களை விட்டும் தள்ளியே நின்று கொண்டிருக்கின்றேன்.
எனினும், இப்போது பொதுத் தேர்தல் களமொன்று நம்மை எதிர்கொண்டுள்ளது. இந்த வேளையில் நமது மண்ணில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு மத்தியில் இந்த அப்துர் றஹ்மான் என்பவர் எப்படிப்பட்டவர், இவருக்கு எத்தனை கரட் மதிப்பீடு வழங்கலாம் என்பதை இத் தேர்தல் காலத் தங்கடையிலுள்ள உரைகல்லில் உரைத்தும், அதனை உரத்தும் சொல்ல வேண்டிய கடமை, காத்தான்குடிச் சமூகக்களத்திலுள்ள ஒரு கிழம் ஊடகவியலாளன் என்ற வகையிலும், கடந்த பத்தாண்டுகளாக இந்த மண்ணைத் தளமாகக் கொண்டு ஒரு வாராந்தப் பத்திரிகையை வெளியிட்டு வருபவன் என்ற வகையிலும் எனக்குள்ளது.
பொறியியலாளர் அப்துர் றஹ்மான் சமூக மாற்றத்திற்கான நல்லாட்சி அரசியல் சிந்தனையுடன் இந்த மண்ணில் களமிறங்கியபோது, இவ்வூரிலுள்ள உலமாக்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள் போன்ற பல தரப்பினருடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தி, இந்த ஊரிலும் இம்மாவட்டத்திலும் ஒரு நேர்மையான, ஊழல் மோசடிகள் இல்லாத, மக்கள் 100 வீதமும் முழுமையாகப் பயனடையக்கூடிய அபிவிருத்திகளை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஆதரவையும், ஒத்துழைப்புக்களையும் கோரினார்.
அந்த வகையில் ஏனைய தரப்பினர்களை விட, இன்றும் அரசியற் களத்தில் மக்களின் ஆணைகளைக் கோரி நிற்கின்ற இந்த மண்ணின் மைந்தர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இந்நாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களுடன் கடந்த இரண்டு நகர சபைக் காலங்களிலும் இவருடன் சபை உறுப்பினர்களாக இருந்த முன்னாள் நகர சபைத் தவிசாளர்களான முபீன், மர்சூக் அகமட்லெப்பை, அஸ்பர் மற்றும் உறுப்பினர்களான ஏ.எம். ஹயாத், சட்டத்தரணி ஏ.ஏ.எம். றூபி, றவூப் ஏ. மஜீத், சல்மா அமீர் ஹம்ஸா, எம்.எம்.ஏ. லத்தீப் (அலி சப்ரி), எச்.எம்.எம். பாக்கீர், எம்.எஸ்.எம். ஸியாத், உதவித் தவிசாளர்… போன்றவர்களுடனும் சபை அமர்வுகளின்போதும், அதற்கு வெளியிலும் நல்லாட்சி அரசியல் குறித்தும், வெளிப்படைத்தன்மையுடைய மக்கள் பணி குறித்தும் அதிகளவு உரையாடியுள்ளார்.
எனினும், காத்தான்குடி அரசியற்களத்தில் இவரது அரசியல் வளர்ச்சியை விரும்பாத இவர்கள் அனைவரும் சந்தர்ப்பவாதக் காரணங்களைக் கூறி இவரை விட்டும் தூரமாகியே நின்றனர். இது வரையிலும் நிற்கின்றனர்.
பொறியியலாளர் ஷிப்லி, யூ.எல்.எம்.என். முபீன், போன்றவர்கள் இப்போது இவருடன் சேர்ந்து அரசியல் மேடைகளில் தோன்றுவதும், நல்லாட்சி பற்றிப் பேசுவதும் அவர்களது கட்சி மற்றும் தனிப்பட்ட அரசியல் வெற்றிகளுடன் கூடிய வேறு நோக்கங்களுக்காகவே அன்றி, உண்மையான பொறியியலாளர் அப்துர் றஹ்மான் வலியுறுத்தி முன்னெடுத்து வருகின்ற நல்லாட்சிக் கொள்கை கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு அல்ல என்பதையும் இந்த இடத்தில் புறம்பாக நோக்க வேண்டும்.
பொறியியலாளர் அப்துர் றஹ்மான் கடந்த 9 வருடங்களாக இவ்வூரில் நல்லாட்சித் தத்துவம் குறித்து நூற்றுக்கணக்கான உரைகளை பகிரங்கமாக மக்கள் சந்திப்புக்களின்போது ஆற்றியுள்ளார். அவற்றில் பெரும்பாலனவை எனது பத்திரிகை மற்றும் இணையதளத்தில் பதிவாகியுள்ளன. இந்த ஒன்பது வருட காலத்திலும் இவரும், இவரைச் சார்ந்தவர்களும் எடுத்துரைத்து வந்த நல்லாட்சித் தத்துவமானது இவர்களிடம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வந்த நிலையில், இப்போது தமது மு.கா.வும், தானும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற சுயநல அரசியல் சிந்தனையில்தான் சகோதரர் ஷிப்லி பாறூக்கும், முபீனும் ‘நல்லாட்சி’ பற்றி வானம் கிழியவும், பின்பக்கம் காற்றுப் பிரியவும் மேடைகளில் தூள் கிளப்பிப் பேசுகிறார்களே தவிர, இவர்களுக்கும் நல்லாட்சித் தத்துவத்திற்கும் எள்ளளவு அல்ல, அதன் முனையளவுக்குக்கூட சம்பந்தம் கிடையாது என்பதே எனது கருத்தாகும்.
ஆதற்கும் என்னிம் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆளுக்கொன்றான ஆதாரங்களை இங்கு குறிப்பிடுகின்றேன்.முதலாவது நகர சபையில் முபீன் அவர்கள் தவிசாளராக இருந்தபோது, ருளுயுஐனு நிறுவனம் 25 இலட்சம் ரூபாவை காத்தான்குடியிலுள்ள வடிகான்களைச் சுத்திகரிப்பதற்காகக் கொடுத்தது. அதற்கு உண்மையில் வேலை செய்வதற்கு சில ஊழியர்களை நியமித்த முபீன் அவர்கள், பொய்யாகப் பலரின் பெயர்களை வடிகான் சுத்திகரிப்பதாகக் குறிப்பிட்டு இலட்சக்கணக்கான சபைக்குரிய பணத்தைக் களவெடுத்தார். மாத்திரமல்ல, இந்த வடிகான்களில் இருந்து பெறப்பட்ட மண்ணை ட்ரக்டர் ட்ரக்டராக ஏற்றி கடற்கரை வீதியிலுள்ள தனது வளவில் கொட்டி நிரப்பவும் செய்தார்.
இந்த மோசடியை நான் பத்திரிகை மூலம் அம்பலப்படுத்தியபோது, எனது வீட்டுக்கு அடியாட்களை அனுப்பி எனது வீட்டைத் தாக்கியதுடன், என்னையும் கொலை செய்வதற்கு முயற்சி செய்தார். நான் தப்பியோடி உயிர் பிழைத்தேன்.
இந்தத் தாக்குதல் பற்றிய உண்மையை அப்போது அவரது சபையில் உதவித் தவிசாளராக இருந்தவரும், இப்போது மு.கா.வின் அரசியல் அதியுயர்பீட உறுப்பினருமாகவுள்ள மர்சூக் அகமட்லெப்பை அவர்கள், கடந்த 2010 பொதுத் தேர்தலின்போது, ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு தெரிவித்து அவரது மேடையில் பேசும்போது பகிரங்கமாகச் சொன்னார்.இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான அரசியல் முன்னெடுப்புக்களைச் செய்தவரான முபீன் அவர்களுக்கு, இஸ்லாம் வலியுறுத்துகின்ற, பொறியியலாளர் அப்துர் றஹ்மான் கூறி வருகின்ற ‘நல்லாட்சி’ எவ்வாறு தலைக்குள் ஏறும்? எனவே, அவர் இப்போது அப்துர் றஹ்மானின் நல்லாட்சி மேடையில் ஏறி நாவரளப் பேசுவதெல்லாம், இந்தத் தேர்தலில் எப்படியாவது, யாருடன் கூட்டுச் சேர்ந்தாவது தனது கட்சியை வெல்லவைத்து, தேர்தல் முடிந்த கையுடன் தலைவரிடம் ஓடிச் சென்று தனக்கான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்பதை என் ஊர் மக்கள் மறந்து விடக்கூடாது.
அப்துர் றஹ்மான் அடிக்கடி சொல்வார்: எமது மக்களின் மறதி, மடத்தனம், சுயநலம். இவை மூன்றும்தான் இன்றைய முஸ்லிம் அரசியல் வியாபாரிகளுக்கு மூலதனமாக உள்ளது என்று. எவ்வளவு உண்மையான விடயம். இந்த மறதியும், மடத்தனமும், சுயநலன்களும் நம் மக்களுக்கு இன்றும் இருப்பதனால்தான் இந்தத் தேர்தலில் காடைத்தனம் புரிந்த முபீனும், அவரைக் காட்டிக் கொடுத்த மர்சூக் அகமட்லெப்பையும் அப்துர் றஹ்மான் உள்ளிட்ட நல்லாட்சி முக்கியஸ்தர்களுடன் ஒன்றாக ஒரே மேடையில் வீற்றிருப்பதைப் பார்த்து இன்னமும் ரசிக்க முடிகின்றது.
இனி பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்கும், நல்லாட்சிச் சிந்தனைக்கும் இடையிலான சம்பந்தத்தை சற்று பார்க்கலாம்.இதே அப்துர் றஹ்மான், இதே ஷிப்லி பாறூக் அவர்களுடன் நல்லாட்சி அரசியல் சம்பந்தமாக பல மணித்தியாலங்கள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். சாதாரண 5ம் வகுப்புப் படித்த பாமரர்களுக்கும் இந்த நல்லாட்சித் தத்துவங்கள் விளங்கி 2006ல் 3000க்கும் அதிகமானவர்களும், 2011ல் 7000க்கும் அதிகமானவர்களும் ஆதரவு அளித்திருந்த போதிலும், பொறியியல்துறை படித்துப் பட்டம் பெற்றவரான ஷிப்லி பாறூக் அவர்களுக்கு SLMC + NFGG அரசியல் கூட்டு ஏற்படும் வரை இந்த நல்லாட்சி என்னவென்பது ஹறாம் விளங்கவில்லை.
தனக்கென்ற அரசியல் கொள்கைகள் எதுவுமில்லாமல், ஹிஸ்புல்லாஹ்வுக்காக மாகாண சபைத் தேர்தலில் இதே அப்துர் றஹ்மானுக்கு எதிராகப் பலிக்கடாவாகக் களமிறங்கி, த.தே.கூட்டமைப்பின் 4000 வாக்குகளை கொள்ளையிட்டு, இதே அப்துர் றஹ்மானின் கிழக்கு மாகாண சபைப் பிரவேசத்தை இல்லாமலாக்கி, ஹிஸ்புல்லாஹ்வின் அப்பட்டமான அநியாயங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் பக்க பலமாகத் துணை நின்ற இந்த ஷிப்லி பாறூக், ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லாவுடனும், கிழக்கு மாகாண 2ம் கட்ட முதலமைச்சர் தெரிவின்போது அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனுடனும் முரண்பட்டு, அரசியல் அநாதையாகி ளுடுஆஊயில் போய் ஒட்டிக் கொண்டிருந்தபோது, SLMC+ NFGG யின் கூட்டு ஏற்பட்டதென்பது, இவரே இந்த ஊரில் ஒட்டியிருந்த ‘யாரும் எதிர்பார்த்திருக்காத மாற்றம்’ என்ற தலைப்பிலான சுவரொட்டியையே எனக்கு நினைவுபடுத்துகின்றது. இப்போது இவரும் நல்லாட்சி பேசி வாக்குக் கேட்கிறார்.
காத்தான்குடி மக்கள் ஒன்றைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த மாகாண சபைத் தேர்தலில் இவர் போட்டியிட்டபோது, இவருக்கு நீங்கள் ஆணையளித்து உங்களின் மாகாண சபை; பிரதிநிதியாகத் தெரிவு செய்தீர்கள். இப்போது, உங்களின் ஆணைக்கேற்ப இவர் பொறுப்பேற்ற மாகாண சபை பதவிக்காலம் இன்னும் மீதமாக இருக்கும்போது, இப்போது நாடாளுமன்றத்திற்கு எம்.பி யாகச் செல்ல முயற்சிக்கின்றார். ஏன் இவரால் இந்தக் கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்து, இவரால் முதல்வராக்கப்பட்ட ஜெ. நஜீர் அகமட்டின் அனுசரணையோடு இந்த ஊருக்கும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கும் சேவைகள் செய்ய முடியாதா?
இவர் என்ன அரசியல் துறையில் பதவி உயர்வு பெறும் நோக்கத்துடனா இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றார்? அன்று, பொறியிலாளர் அப்துர் றஹ்மான் கிழக்கு மாகாண சபைக்குச் செல்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் அநியாயக்காரர்களுடன் சேர்ந்து நநாசமாக்கி இல்லாதொழித்த இவர், இப்போதும் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்புக்கு ஆப்பு வைப்பதற்காகவா ஹிஸ்புல்லாவின் பினாமியாக மாறி ளுடுஆஊயில் இணைந்து கொண்டு போட்டியிடுகின்றார்?
‘முகம் நிறைய தாடியை வைத்துக் கொண்டு ஊரை ஏமாற்ற வேண்டாம்’ என்று ஹிஸ்புல்லாவே இவருக்கு பகிரங்கமாகச் சிறப்புச் சான்றிதழ் கொடுத்திருக்கும்போது, இவரது நடவடிக்கைகளில் ஊர்மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது எச்சரிப்பாகும்.
ஊடகங்களிலும், கிழக்கு மாகாண சபையிலும், மாவட்ட அபிவிருத்திச் சபையிலும், களுவாஞ்சிகுடி நீதிமன்றத்திலும், காணாமல் போனோர் ஆணைக்குழுவிலுமாக இவர் பரபரப்பாக முன்னெடுத்த நமது ஊரின் தெற்கு எல்லைப் பிரச்சினை விவகாரம், மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் காணி மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி விவகாரம், குருக்கள்மடத்தில் புதையுண்ட நம்மவர்களைத் தோண்டும் விவகாரம், வன்செயல்களால் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றும் விவகாரம் போன்ற பல்வேறு விடயங்கள் இடைநடுவில் இருக்கத்தக்க, இவர் இப்போதே நாடாளுமன்றம் போக வேண்டிய அவசியமும், அவசரமும்தான் என்ன?
கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராகிப் பெற்ற தீர்வையற்ற ஆடம்பர வாகனத்தில் வந்த இலாபத்தில், சொந்தப்பணம்; 62 இலட்சம் ரூபாவில் பாம் றோட்டைப் போடுவதாக ஷோ காட்டியாகி விட்டது. இப்போது நாடாளுமன்றத்திலும் எம்.பி.யாகி அதன் மூலம் கிடைக்கும் தீர்வையற்ற வாகனத்தைச் சந்தைப்படுத்தி கிடைக்கும் பணத்தையும் சொந்தப்பணத்தில் சேர்த்துக் கொள்ளவா? ஏன்று நான் கேட்க விரும்புகின்றேன்.
சிலருக்கு தீச்ச கறியில் உச்ச விருப்பம். இன்னும் சிலருக்கு தீர்வையற்ற காரில் விருப்பம்.
எதிர்வரும் 17ம் திகதி நாம் வாக்களிப்புச் செய்து நமது பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தோல்வியடைந்து விட்டார் என்றே வைத்துக் கொள்வோம். ஆதனால் நமது ஊருக்கு என்ன நஷ்டம்? அவருக்கு ஆணை வழங்கிய மக்கள் சிந்திக்க வேண்டும். அவர் தொடர்ந்தும் கிழக்கு மாகாண சபையில் இருந்து அவரது மக்கள் செவையைத் தொடரலாம். ஆனால் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் தோல்வியடைந்தால்…
(தொடரும்)
Published by


Leave a reply to mohamedrislan Cancel reply