காத்தான்குடி: காத்தான்குடியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (26.07.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை, நகரின் மத்தியிலுள்ள குட்வின் சந்தியில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் மற்றும் முன்னாள் பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 1ம் இலக்கத்தில் வேட்பாளராகப் போட்டியிடும் தலைமை வேட்பாளர் சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, காத்தான்குடிப் பிரதேச முன்னாள் நகர சபை உறுப்பினரும், 7ம் இலக்க வேட்பாளருமான சட்டத்தரணி ஏ.எம்.எம். றூபி உட்பட சக வேட்பாளர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
Published by

Leave a comment