காத்தான்குடி: எமது காத்தான்குடியின் கண்ணாகத் திகழும் மட்/காத்தான்குடி மத்திய கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 85 ஆண்டுகள் கடக்கும் நிலையில் உள்ளது. இதனை நினைவூட்டி பல போட்டி நிகழ்ச்சிகள் 85ம் வருட ஞாபகார்த்தமாக ஒழுங்கு செய்யப்படுள்ளன. அந்த வகையில் பாடசாலையின் கலாசாரக்குழு இஸ்லாமியக் கலாசார நிகழ்ச்சிகளையும் நடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளன.
போட்டிகள்:
1- கிறாஅத்
2- பேச்சுப் போட்டி (தமிழ்)
3- அறபு எழுத்தணி
மேற்படி போட்டி நிகழ்ச்சிகள் எதிர்வரும் 27-07-2015 ம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலை நூலக மேல் மாடியில் நடாத்தப்படும். விசேடமாக இப்போட்டிகள் மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இடம் பெறும். 10ம் ஆண்டுக்கு மேற்பட்ட வகுப்புக்கள் உள்ளடங்கிய பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும்.
இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இப்போட்டிகளுக்கு எல்லாமாக 75 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். போட்டிகள் அனைத்தும் ஆண், பெண் வௌ;வேறாக நடைபெறும். பாடசாலைக்கு வெளியே உள்ள நடுவர்களால் போட்டிகள் நடாத்தப்படும் .
இவ்வண்ணம்
கலாசாரக் குழு தலைவர்.
மௌலவி UM. ஷாஜஹான் பலாஹி ஆசிரியர்.(தகவல்: FM. பர்ஹான்)
Published by

Leave a comment