காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ்வில் பட்டம் பெற்ற பலாஹிய்யீன்களின் வருடாந்த ஒன்றுகூடல் – 2015

falahகாத்தான்குடி: காத்தான்குடியில் சன்மார்க்கக் கல்விக்காகாக 1955ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் பழைமை வாய்ந்த அறபு மத்ரசக்களின் வரிசையில் ஜாமிஅதுல் பலாஹ் அறபுக்கல்லூரியும் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஹாபிழ்கள், மௌலவிகள் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். இதில் வெளியேறிச் சென்ற பழைய மாணவர்களின் அமைப்பே ‘ மஜ்லிஸூல் பலாஹிய்யீன்’ ஆகும்.

இவ்வமைப்பின் வருடாந்த ஒன்று கூடல் இன்று 26-07-2015 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 8.30 மணிமுதல் பிப 12.00 மணிவரை புதிய காத்தான்குடி ஜாமிஆவின் புதிய கட்டிடத்திலும் பிப. 1.30 மணிமுதல் பிப. 05.00 மணி வரை ஜாமிஆவின் பழைய கட்டிடத்திலும் ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடைபெறும்.
இந்நிகழ்வுகளுக்கு சுமார் 373 பட்டம் பெற்ற ஹாபிழ்களும், 399 இஸ்லாமிய கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மௌலவி பலாஹீன்களுக்கும் அழைப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மேற்படி நிகழ்ச்சிகளில் பலாஹிய்யீன்களின் முன்னைய கால அனுபவங்கள், திறமைகள், உணர்வுகள், சுக துக்கங்கள், மரணித்தவர்களின் நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்படும்.

falah

இவ்வருடாந்த சந்திப்புக்கு நாட்டின் பல பாகங்களில் பட்டம் பெற்றுக் சென்ற சுமார் 500 பலாஹிய்யீன்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இம்மாநாட்டில் நடப்பு வருடத்திற்கான புதிய நிருவாகத் தெரிவு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பலாஹிக்கும் சென்ற வருடம் போல் நினைவுப் பரிசுகளும் வழங்கப்படும்.

ஓன்று கூடலின் பிரதான நோக்கங்கள்.

• மிக நீண்ட நாட்களின் பின் கற்றறிந்த பலாஹிய்யீன்கள் தமது வகுப்பு நண்பர்களை சந்திக்கும் அரிய வாய்ப்புக் கிடைக்கின்றது.

• கல்வி கற்ற ஜாமிஆவுக்கு எதிர்காலத்தில் எவ்வகையில் பௌதீக வளங்களை மேம்படுத்த முடியும், அதற்கான பொருளாதார உதவிகளை எப்படி சேர்க்க முடியும் என்ற விடயங்கள் ஆழமாக ஆராயப்படும்.

• நோய்வாய்ப்பட்டுள்ள, தொழிலற்ற, பாதிக்கப்பட்ட, வறுமை நிலையில் உள்ள பலாஹிய்யீன்களின் நலன்கள், நலன்புரிகள் பற்றியும் ஆராயப்படும்.

• கல்வி கற்றுத் தந்த உஸ்தாதுமார்களை சந்தித்தல் குறிப்பாக ‘i’குல் பலாஹ்’ உஸ்தாதுனா அவர்களை சேமநலன் விசாரித்தல் பிரார்த்தனைகளைப் பெற்றுக் கொள்ளள், தொடர்புகளை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பம் ஏற்படல்.

• எமது மஜ்லிஸை எதிர்காலத்தில் மேலும் முன்னேற்றம் அடையச் செய்ய விடயங்களை ஆளமாக ஆராய்தல்.

• எமது ஜாமிஆவின் கல்வித்தரத்தை மேலும் விஸ்தரிப்பதற்கான ஆலோசனைகளைப் பெற்று உரிய முறையில் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் ஏற்படுத்தல்.

இவ்வாறான நோக்கங்களை கொண்டே எமது மஜ்லிஸ் வருடாந்தம் ஒள்றுகூடல்களை ஏற்பாடு செய்கின்றது. மேலும் பலாஹிய்யீன்களின் கல்வி முன்னேற்றம் ஆக்கத்திறன்கள் சமூக பணிகள் போன்றவற்றை அறிமுகம் செய்து பாராட்டி ஊக்கப்படுத்தல் போன்றவைகளை முன்னிலைப்படுத்தியே இவ்வொன்றுகூடல் நடைபெறுகின்றது.

இதற்கான அழைப்புக்கள் இதுவரை உரிய முறையில் கிடைக்கப்பெறாத பலாஹிய்யீன்கள் நமது வீட்டு நிகழ்வு என கருத்திற்கொண்டு பெருமனதுடன் வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இவ்வண்ணம்,

செயலாளர்

அல்-ஹாபிழ், மௌலவி. UM. ஷாஜஹான் பலாஹீ BA, JP

(தகவல்: FM. பர்ஹான்)

Published by

Leave a comment