காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் வசிக்கும் 29 வயது நிரம்பிய இளம் சாதனையாளர் முஹம்மட் றிஸ்வி என்பவர் தனது பிரதேசத்தில் காணப்படும் கழிவுப்பொருட்களைப் உபயோகித்து துரித கதியில் இயங்கும் மா அரைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
இவர் பற்றி மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 5ம் இலக்க வேட்பாளருமாகிய பெறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், இப்படியான சாதனையாளர்கள் உருவாகுவகுவது அரிது, இவர்கள் பாராட்டப்படவேண்டும், இவர்களுக்கான வளங்கள் மேலும் விருத்தி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் இவர் இளம் சாதனையாளர் எனவும் இவர் இந்த காத்தான்குடி மண்ணுக்கும் இந்த நாட்டுக்கும் பெருமை சேர்த்துத்தந்துள்ளார். இவருடைய இரண்டாவது சாதனையான இந்த மா அரைக்கும் இயந்திரமானது அகில இலங்கையில் சாதனையளர் போட்டிக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் எனக் கூறினார். இவர்களுக்கான சரியான ஊக்குவிப்புத்தளம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை எனவும் தெரிவித்த அவர். நான் எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் இவ்வாறன சாதனையாளர்களுக்கு அவர்களுடைய திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய படைப்புக்கான ஆராய்ச்சி தளம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பேன் என தெரிவித்தார்.
ஆகவேதான் இப்படியான மக்களை பற்றி சிந்திக்கும் துடிப்புள்ள இளம் அரசியல் வாதிகளை பாராளுமன்றம் அனுப்பி நமது இளம் சிறார்களை அழகு பார்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். ஆகவேதான் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எமது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்கு வாக்களிப்போம். வெற்றி பெறச் செய்வோம். பெறியலாளர் ஷிப்லி பாறூக்கினுடைய வெற்றி அவருடைய வெற்றி அல்ல அது நமது வெற்றி, நமது மண்ணின் வெற்றி, நமது குழந்தைகளின் வெற்றியாகும்.
Published by

Leave a reply to Mohamed Jezly Cancel reply