ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் நடவடிக்கை பாராட்டத்தக்கது

ISIS-Sri-Lanka-[1]– எம்.ஐ.அப்துல் நஸார்

கொழும்பு: இலங்கையின் அரசியல் களத்தில் இனவாதம் என்பது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கான பேசு பொருளாகவும், அரசியல் மூலதனமாகவும் இனவாத சக்கதிகளால் பார்க்கப்படுகின்றது. இனவாதக் கருத்துக்கள் குறிப்பாக முஸ்லிம்களின் கலாச்சாரம் மற்றும் உணவு முறைகள் தொடர்பில் வெளிப்படையாக விமர்சிக்கும் அளவிற்கு நிலைமை கட்டுக்கடங்காமல் போயிருந்தது.

பலம் மிக்கதான அரசியல் பின்புலமும், அவ்வாறான விமர்சனங்களை காத்திரமாக எதிர்கொள்ள முடியாத பலவீனமும் இது மென்மேலும் வியாபிக்க காரணமாகியது.

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் இந்தப் போக்கில் சற்றுத் தளர்வினை ஏற்படுத்தி இருந்தபோதிலும், மறைமுகமாகவும் தீவிர அரசியல் மூலமும் முஸ்லிம்களுக்கொதிரான நடவடிக்கைகள் கூர்மைப்படுத்தப்படுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டு, மோதலொன்றில் உயிரிழந்ததகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் தொடர்பில் அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த தகவல் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அபூ சுரெய் ஸெயிலானி என அழைக்கப்படும் 37 வயதுடைய இந்த நபர் 6 பிள்ளைகள் தந்தை எனக் கூறப்படுகின்றது. பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் ஷரீஆ சட்டம் பயின்று பட்டம் பெற்றவரென்றும் அரபு, உருதுஇ சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் எனுவும், இவர் சர்வதேச பாடசாலையொன்றின் அதிபர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம்கள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்க ஏதேனும் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தவர்களின் காதுகளுக்கு தேனாய் பாய்ந்த இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு பொது பலசேனா போன்ற இனவாத அமைமப்புக்கள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கின. இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையில் தலைதூக்கியுள்ளது என்பதை நாம் முன்னரே கூறினோம் ஆனால் எவரும் அதனை நம்பவில்லை, இப்போது அது நிரூபணமாகி இருக்கிறது என்பது போன்ற கருத்துக்களை ஊடகங்களுக்கு கொட்டித் தீர்த்தன.

இந்த சந்தர்ப்பத்தில் காலத்திற்குப் பொருத்தமான ஒரு கடிதத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதியவர்களுக்கு எழுதியது மட்டுமல்லாது ஊடகங்கள் வாயிலாகவும் அதன் விபரங்களை வெளியிட்டது.

அந்தக் கடிதத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து பேரிட்டு உயிரிழந்த இலங்கை முஸ்லிம் நபர் தொடர்பில் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்ததோடு தம்மை கலீபா என்று அழைத்துக் கொள்ளும் இந்த தீவிரவாத முஸ்லிம் அமைப்பின் நடவடிக்கைகள் இஸ்லாமிய ஷரீ’ஆ வுக்கும் மனிதாபிமான சட்டங்களுக்கும் முரணானது மட்டுமல்லாமல் இஸ்லாத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பான இலங்கைவாழ் முஸ்லிம்கள் அனைவரினதும் ஒட்டுமொத்த நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தது.

ISIS-Sri-Lanka-[1]

அத்துடன் உலக இஸ்லாமிய அறிஞர்கள் என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினை அங்கீகரிக்கவில்லை எனவும் இந்த சம்பவத்தைஇ தவறாக வழிநடத்தப்பட்ட தனிநபர்களின் நடவடிக்கை என்பதை வலியுறுத்த விரும்புவதாகவும் தெரிவித்திருந்ததோடு நாட்டின் சட்டத்தை மதியாது எவராவது செயட்படுவராயின்இ அவர்களை விசாரித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, தயவு தாட்சண்யமின்றி தண்டனை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்படடிருந்தது.

இது போன்ற நடவடிக்கைகளில் இனியும் கலந்து கொள்ள விருப்போருக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் சுட்டிக்காட்டியிருந்தது.

இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு சமூக இயக்கம் என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், அரசு மேற்கொள்ளும் எந்த விசாரணையிலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராய் உள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையர்களயிடையே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தொடர்பிலான முஸ்லிம்களின் நிலைப்பாடு சம்பந்தமாக ஒரு தெளிவற்றை நிலை காணப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு எழுதப்பட்ட இந்தக் கடிதம் ஒரு தெளிவினை ஏற்படுத்தியிருப்தோடு இலங்கை வாழ் முஸ்லிம்கள் அடிப்படைவாதத்தயோ, இனவதத்தையோ தூண்டுவதற்கு விரும்பவில்லை என்பதையும், அவ்வாறானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதையும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளது.

நீண்டகால ஊடக அனுபவத்தைக் கொண்ட என்.எம். அமீன் அவர்களின் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சிலின் காலத்திற்குப் பொருத்தமான இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கதாகும்

Published by

Leave a comment