பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மீரா ஜும்ஆ மஸ்ஜிதுக்கு விஜயம்

Meera jumma mosqueநமது நிருபர்

காத்தான்குடி: 1990ம் ஆண்டு காத்தான்குடியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குள்ளான மஸ்ஜித்களில் ஒன்றான காத்தான்குடி மீரா ஜும்ஆ மஸ்ஜிதுக்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவராலய உயர் ஸ்தானிகர் திரு. ஜேம்ஸ் டோரிஸ் இன்று புதன்கிழமை மாலை விஜயம் செய்தார்.

அத்துடன் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது, 25 வருடங்களின் பின்பும் ஏன் இவ்வாறான அடையாளங்கள் பாதுகாக்கப்படுகின்றது மற்றும் கடந்த மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னர் முஸ்லிம்களின் நிலை எவ்வாறு காணப்படுகின்றது என்பன பற்றி பள்ளிவாயல் செயலாளர் AJ. அனீஸ் அஹமட் JP அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.

Meera jumma mosque

இந்த சந்திப்பின் போது பள்ளிவாயல் நிருவாக சபை தலைவர் அல்ஹாஜ் MIM. சுபைர் JP மற்றும் நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment