திஸ்ஸ அத்தநாயக்க புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார்

tissa-attanayakeஎம்.ஐ. அப்துல் நஸார்

கொழும்பு: முன்னாள் சுகாதார அமைச்சரும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளார்.

ஐக்கிய பிரஜைகள் முன்னணி எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கட்சியின் சின்னம் பூச்சாடியாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்களுக்கும் ஏனையோருக்கும் இக்கட்சி களமமைக்கும் என தனது கட்சியின் அங்குரார்ப்பண முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்து உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவத்ததாவது, தனது கட்சி தாராண்மைவாத ஜனநாயகக் கொள்கையினை அடிப்படையாகக் காண்டிருக்கும் எனத் தெரிவித்தார்.

Published by

Leave a comment