பொலிசார் மீது முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
கொழும்பு: கெத்தாராம மைதானத்தில் இடம்பெற்ற முறுகலையடுத்து ஏற்பட்ட மோதல்களின்போது பொலிஸார் நியாயமற்றமுறையில் நடந்துகொண்டதாகவும் குற்றச்சொயல்களில் ஈடுபடாத அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையே கைது செய்துள்ளதாகவும் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கெத்தாராம ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வும் அதற்கு பின்னர் இடம்பெற்ற சம்பவங்களும் கண்டிக்கத்தக்கதாகும்.
மைதானத்தில் இடம்பெற்ற இருவருக்கிடையிலான முறுகலே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. மைதானத்தில் இருந்த தரப்பினராலேயே பள்ளிவாசலுக்கு கல் எறியப்பட்டுள்ளது. அத்துடன் மைதானத்திற்கு வெளியில் இருந்தவர்களால் விளையாட்டரங்கை நோக்கி கல் எறியப்பட்டுள்ளது. இவர்களை பொலிஸாரால் தடுத்துநிறுத்த முடியவில்லை.
ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்பற்ற அப்பாவி இளைஞர்கள் இருவரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் எந்தவிதமான தகராறிலும் ஈடுபடாது கிரிக்கெட்போட்டியை பார்க்கச் சென்றவர்களே. போட்டியை கண்டுகளித்துவிட்டு வெ ளியில் வரும்போது அநியாயமாக இவர்கள் கைதாகியுள்ளனர்.
எனவே இது விடயத்தில் சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அப்பாவி இளைஞர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a comment