ஐ.எஸ். அமைப்பில் இலங்கையைச் சேர்ந்தவர் இருந்தாரா என்பது குறித்து விசாரணை
கொழும்பு: இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவுடன் இணைந்து போரிட்டு மரணமடைந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்தார்.
சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றின்போது, ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக உடகங்கள் முலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்திகள் உண்மையா என்பது குறித்து உறுதிபடுத்திக் கொள்வதற்காகவே இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம் என்று ருவன் குணசேகர கூறினார்.
இதன்படி சம்பந்தப்பட்ட நபர் தொடர்பாக விசாரணையோன்றை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் மத்திய மாகணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மரணமடைந்துள்ளதாக கூறப்படும் நபரின் தேசிய அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறிய போலிஸ் ஊடக பேச்சாளர், அதன் படி இந்த நபர் கண்டி பிரதேசத்தில் வசித்துவந்துள்ளதாக குறிப்படப் பட்டுள்ளதாக கூறினார்.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொல்லப்பட்டதாக நம்பப்படும் இலங்கையர்
இந்த நபர் எவ்வாறு ஐ.எஸ். அமைப்புடன் இணைந்துள்ளார் என்று கேட்டபோது, இது சம்பந்தமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய ருவன் குணசேகர, இப்போது மேலதிக விபரங்களை தெரிவிக்க முடியாதென்றும் கூறினார்.
இதேவேளை, இந்த சம்பவம் குறித்து விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு இலங்கை முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்வாறான செயல்களை கண்டிப்பதாக இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் எம்.எம். அமின் கூறினார்.
Leave a comment