இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகரருடன் NFGG பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்

Nfgg– NFGG

காத்தான்குடி: இலங்கை மற்றும் மாலைதீவு ஆகியவற்றுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் அவர்களுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் இன்று மாலை சந்தித்து கலந்துரையாடினர்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கிழக்குப் பிராந்திய தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பொறியியாளர் அப்துர் ரஹ்மான், தலைமைத்துவ சபை உறுப்பினர்களான பொறியியலாளர் பலுளுள் ஹாக், MACM.ஜவாஹிர், பிராந்திய செயற்குழு உறுப்பினர்களான AGM.ஹாறூன், ASM.ஹில்மி உள்ளிட்ட மகளிர் அணி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Nfgg

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்னெடுத்து வருகின்ற அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இலங்கையின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

Published by

Leave a comment