மட்டக்களப்பு: சம்மந்தன் ஐயா அவர்கள் தேர்தல் காலத்தில் மறைந்த தலைவர் அஸ்ரப் சார்ந்து முதலைக்கண்ணீர் வடிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினை திருத்திபடுத்த முடியாது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் NK றம்ழான் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் முஸ்லிம் மக்கள் மற்றும் புத்திஜீவிகள் சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் ஐயா, அவர்கள் உரையாற்றுகையில் வடகிழக்கு மீது மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு இருந்த அக்கறை இப்போது எவருக்குமில்லை என தெரிவித்து இருந்தார்.
மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவரை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமையாக அன்று அங்கிகரிக்க மறுத்து அவரை இனவாதியாகவும் மதவாதியாகவும் பறைசாட்டி முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை ஏற்க மறுத்து முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத கருத்துக்களை வெளியிட்டு தமிழ் மக்களின் எதிரியாக மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களை அடையாளப்படுத்திய நீங்கள் இரு தமிழ்பேசும் இணங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தி என்றும் இணையாத இரு துருவங்களாக மாற்றியமைத்தவர்கள் தற்போது தேர்தல் காலத்தில் அவருக்காக முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாகவுள்ளது.
அத்தோடு வடகிழக்கில் வாழுகின்ற தமிழர்களில் சாதியில் குறைந்த தமிழர்களே இஸ்லாமியர்களாக மாறினார்கள் என விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் முஸ்லிம் இனத்தையும் அதன் அரசியல் தலைமைத்துவத்தையும் கொச்சைப்படுத்திய போது வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்த்து விட்டு இன்று அவரை ஒரு உயர்ந்த மனிதராக முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் புகழ்ந்து பேசி சந்தர்ப்பவாத அரசியல் செய்வதை சம்மந்தன் ஐயா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அது மாத்திரமல்ல மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்காக முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினார் அக்கட்சிக்கு வாக்களித்தார்கள் என்ற ஒரேயொரு காரணத்திற்காகவே விடுதலைப் புலிகள் வடமாகாண முஸ்லிம்களை இரவோடு இரவாக விரட்டியடித்தனர் அதனை இன்று வரைக்கும் சம்மந்தன் ஐயா அநீதியாக ஏற்றுக் கொள்ளவோ அல்லது அதுவிடயமாக கருத்து தெரிவிக்கவோ இல்லை அது மாத்திரமின்றி கிழக்கில் காத்தான்குடியில் இருபள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது ஏறாவூர், அளிஞ்சிப்பொத்தானை, பள்ளித்திடல், பங்குராணை போன்ற இன்னும் பல முஸ்லிம் கிராமங்கள் புலிகளின் இனவெறித்தனமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட போது அதனை எதிர்த்து எதுவித எதிர்ப்பு அறிக்கையும் விடாத நீங்கள் இன்று தேர்தல் காலத்தில் முஸ்லிம்கள் மீது அக்கறை கொள்வது போன்று பாசாங்கு கொள்வதன் மரம்மம்தான் என்ன?
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு ப தமிழ்ச்செவ்வன் அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட ஊடுறுவல் தாக்குதலினால் கொள்ளப்பட்ட போது தமிழர்களின் பிரதிநிதிகளாகிய நீங்கள் நாடாளமன்றத்தில் மௌனமாக இருந்தீர்கள் அப்போது தமிழ் மக்களின் ஜனநாயக பேச்சுவார்த்தைக்கான குரலை அரசு நசுக்கி விட்டதாகவும் தமிழர்களின் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவதற்காக இருந்த ஒரோயொரு சந்தர்ப்பத்தையும் அரசு இல்லாது செய்து விட்டதாக மிகவும் துணிச்சலாக பாராளமன்றதில் குரல் கொடுத்தவர் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் என்பதை சம்மந்தன் ஐயா, மறந்து விடக் கூடாது
இன்று முஸ்லிம்கள் மீது அக்கறை கொண்டவர்களாக தங்களை அடையாளப்படுத்த எத்தனிக்கின்ற நீங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி ஆணையாளராக ஒரு முஸ்லிம் வரக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11பேரும் கையப்பம் இட்டுக் கொடுத்தது மாத்திரமன்றி தமிழர் ஒரு அப்பதவிக்கு வராவிட்டாலும் பரவாயில்லை ஒரு சிங்களவர் வரட்டும் என போராட்டம் நடாத்திய நீங்கள் இன்று இன ஒற்றுமை பற்றியும் வடகிழக்கு மீது இப்போதிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு அக்கறையில்லை என குற்றம் சுமத்துவது சுயநல அரசியல் செயற்பாடாகும்அதுமட்டுமன்றி ஆட்சி மாற்றத்தின் பின் கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்மைப்பிடம் 11 ஆசனங்கள் இருக்கின்றது நாங்களே ஆட்சியமைக்க வேண்டும் என்றும் 07 ஆசனங்கள் வைத்திருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு ஆட்சியமைக்க முடியும் கிழக்கில் எங்களுக்கே ஒரு பெரும்பான்மை மாவட்டம் இருக்கின்றது ஆனால் எந்தவொரு பொரும்பான்மை மாவட்டங்களும் இல்லாத முஸ்லிம் சமூகம் எவ்வாறு கிழக்கில் ஆட்சியமைப்பது என பல்வேறு இனவாத கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாகவே இன்று முஸ்லிம்களுக்கும் ஒரு தனியான பெரும்பான்மை மாவட்டம் அவசியம் என முஸ்லிம்களை மிக ஆழமாக சிந்திக்கச் செய்துள்ளது.
இவ்வாரே தளபதி அ. அமிர்தலிங்கம் போன்ற தமிழ் அரசியல் தலைவர்களின் காலத்தில் முஸ்லிம்கள் மீது காட்டிய இனதுவேசமும் இனவாதரீதியான கருத்துக்களுமே முஸ்லிம்களுக்கான தனிக்கட்சி உறுவாகுவதற்கு காரணமாக இருந்தது என்பதை சம்மந்தன் ஐயா, மறந்து விடக்கூடாது முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தையும் அதன் அரசியல் நடவடிக்கைகளையும் மிக கிழ்த்தரமாக நீங்கள் விமர்சிப்பதால் எதிர்காலத்தில் தமிழ்ப்பேசும் இருசமூகங்களுக்கு இடையில் ஒருபோதும் இனநல்லுரவு ஏற்படாது என்பதே எதார்த்தமாகும.;
பொறுப்பு வாய்ந்த சம்மந்தன் ஐயா, போன்றவர்களின் இவ்வாரான அரலைத்தனமான அடுத்த சமூகத்தின் அரசியல் தலைமைகள் மீதான காழ்புனர்ச்சி காரணமான விமர்சனங்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளில் ஒன்றான வடகிழக்கு இணைந்த தாயக கோட்பாட்டிக்கு பாரிய தடையாக அமையும் என்பதை மறந்து விடக்கூடாது எனவும் தெரிவித்தார்
Published by

Leave a comment