இலங்கை-பாகிஸ்தான் மோதும் இன்றைய போட்டியில் பாதுகாப்பு அதிகரிப்பு

srilanka v pakistan cricketகொழும்பு: கெத்தாராம ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று (22) இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்ற போட்டியில் ஏற்பட்ட அசாதாரண நிலையை தவிர்க்க சில வேலைத்திட்டங்கள் இலங்கை கிரிக்கெட் சபையால் மேற்கொள்ளபட்டு வருகிறது.

அதன் முக்கிய நடவடிக்கையாக அரங்கில் ரசிகர்கள் இருக்கும் பகுதிகளில் முழுதுமாக சல்லடை (வலை) மூலம் மறைக்கபட்டு வருகிறது.

இதன் மூலம் ரசிகர்கள் போட்டியை கண்டுகளிக்கும் இடத்தில் இருந்து மைதனத்திட்குள் பொருட்களை வீசவோ, மைதானத்தில் நுழையவோ தடை செய்யபடுவதுடன், இன்றைய போட்டியில் அதிகளவான பொலிஸாரும் கடமையில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment