“அம்பாரை மாவட்டத்தில் ஐ.சு.கூ, அ.இ.ம.காங்கிரஸ் முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கினாலும் வெற்றி பெறுவதென்பது கேள்விக்குறியாகும்”

imageஹாசிப் யாஸீன்

சாய்ந்தமருது: அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை களம் இறக்கினாலும் வெற்றி பெறுவதென்பது கேள்விக்குறியாகும். அக்கட்சிகளினால் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதியையும் பெற முடியாது.

இவ்வாறு நேற்று திங்கட்கிழமை (20) மாலை சாய்ந்தமருது சீ பிறிஸ் ரெஸ்டருடன்டில் நடைபெற்ற ஊடகவியாலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

இவ்ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான எம்.சீ.பைசால் காசீம், முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான எம்.ஐ.எம்.மன்சூர் உள்ளிட்ட மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மாவட்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
image

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

புதிதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடுவதால் எமது கட்சியின் வாக்கு வங்கியில் எதவித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இதனை நாம் ஒரு பொருட்டாககூட எடுக்கவில்லை. என்னுடைய பார்வையில் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்களை அரசியல் அநாதையாக்குகின்ற துரோகத்தனத்தையே செய்ய முட்பட்டுள்ளார்.

அம்பாரை மாவட்டத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதியை ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் மாத்திரதே பெற்றுக்கொடுக்க முடியும். ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அம்பாரை, தெஹியத்தகண்டி, மகாஓயா போன்ற பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களும் வாக்களிக்க முன் வந்துள்ளார்கள். இதன் காரணமாக எமது மூன்று பிரதிநிதித்துவங்களினதும் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட வெற்றியாகும்.

அம்பாறை மாவட்டத்தில் மீண்டுமொரு அஷ்ரஃப் யுகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்சியின் தலைமையினால் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் நாலாபக்கமும் அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது ‘லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மருதமுனை வீட்டுத்திட்டம், பொத்துவில் காணிப் பிரச்சினை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல பேச்சுவார்த்தைகளை நடாத்திய பின்பே இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தார் எனவும் தெரிவித்தார்.

Published by

Leave a comment