SLMC + NFGG இணைந்து நடாத்தும் முதலாவது பிரச்சாரக் கூட்டம்

imageNFGG

காத்தான்குடி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் பிரசாரப் பொதுக்கூட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு காத்தான்குடி குட்வின் சந்தியில் இடம்பெறவுள்ளது.

இப்பிரச்சாரக்கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5ம் இலக்க வேட்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாரூக் அவர்களும் மற்றும்பல வேட்பாளர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இப்பொதுக்கூட்டத்திற்கு அனைத்து வாக்காளப் பெருமக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.NFGG slmc

Published by

Leave a comment