இன்றைய அரசியல் சவால்களுக்கு முகங்கொடுக்கும் கட்சியாக அ.இ.ம.கா. இருக்கிறது

acmc makkal cong– அபூ அஸ்ஜத்

கொழும்பு: இலங்கையின் அரசியல் களத்தில் பேசப்பட்ட பெரும்பான்மை கட்சிகளின் நலவு இடதுகளை கடந்து இன்று இரு சிறுபான்மை கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன மாறியுள்ளது.குறிப்பாக இன்றைய அரசியல் அரங்கில் சவால் விடும் அளவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிருப்பது தொடர்பில் ஏன் பேசப்படுகின்றது என்பதை நோக்குவது பொருத்தமாகும் என்பது எனது பார்வையில் பட்டதாகும்.

இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்,அது அரசியல் ரீதியான அந்தஸ்த்து கொண்டதாக இருக்க வேண்டும் என்று மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் நினைத்தார்கள்.அந்த நினைப்புடன் மட்டும் அவர் நின்று விடாமல் அதனை விதை்து மரமாக்கி மக்கள் அதனது கணிகளை புசிக்கும் நிலையினை ஏற்படுத்தினார்.அத்தோடு மட்டும் நின்றுவிடாமல் முஸ்லிம்களும் சவால்விடும் சக்திகளுக்கு எதிராக அந்த சவால்களை ஏற்றுக்கொள்ளும் மன வலிமையினை இறைவன் அவருக்கு கொடுத்திருந்தான் என்பதையும் நாம் அவர்களது செயற்பாடுகளின் முடிவுகளில் இருந்து காணமுடிந்தது.

இவ்வாறானதொரு நேரத்தில் தான் அவரது மரணம் சம்பவித்தது.இந்த மரணத்தின் பின்னர் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் பல்வேறு போட்டா போட்டி நிலைகள்,நீதிமன்றங்கள்,மற்றும் அவமதிப்புக்கள் என்பன பிரதான காரணங்களாக இருந்தன.இதன் பிற்பாடு இந்த கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கட்சிக்குள் முரண்பாடுகள் வெடித்தன.இறுதியில் அதில் பல இழப்புக்களை சந்தித்த வரலாறும் உண்டு.
அதன் பிற்பாாடு அரசியலில் தீர்மாணிக்கும் சக்தியாக சில காலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்த போதும்,அதனது போக்கும் புதிய தலைமைத்துவத்தின் நோக்கும் சுயநல தன்மை கொண்டதாக மாறியதால் மக்கள் அந்த கட்சியில் இருந்து துாரமாக நேரிட்டது,இவ்வாறு முஸ்லிம்களின் கட்சி விலகல் எதிர்கால சமூகத்திற்கு பெரம இழப்பினை சந்திக்ககும் என்பதால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற கட்சியின் உருவாக்கம் தேவைப்பட்டது.

இந்த கட்சி அரசியலுக்கு அனுபவம் இல்லை என்று கூறிய போதிலும்,அதனது தலைமைத்துவம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமையினை விட சாணக்கியம் கொண்டதும்,வலுவுள்ளதும் என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற,மாகாண சபை,நகர.பிரதேச சபைகளின் அங்கத்துவம் பறைசாற்றி நிற்கின்றது.

இந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவராக இருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் வடக்கு மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளை கொச்சைப்படுத்துவதுடன்,அதற்கு இனவாதம் பூசி அதன் 5லம் இந்த தலைமைத்துக்கு அபததம் செய்யும் திருகுதாளங்களும் இடம் பெறாமல் இல்லை,இதற்காக பல கட்சிகளும்,அமைப்புக்களும்,திறை மறைவிலும்,வெளிப்படையாகவும் செயலாற்றிவருகின்றதை நாம் அவதானிக்க முடிகின்றது.அரசியல் தலைமைத்துவம் எப்படி மக்களுக்காக செயற்பட வேண்டும் என்பதற்கு ஓர உதாரணமாக அமைச்சர் றிசாத் பதியுதீன் செயற்பட்டுவருவது இன்றைய அரசியல் சக்திகளுக்கு சவாலாக இருக்கின்றமை யதார்த்தமாகும்.

இந்த நிலையில் வன்னியிலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்த றிசாத் பதியுதீன் பல படிமங்களை தாண்டி கட்சியொன்றின் தலைவராக இன்று மாறியுள்ளார்.அவர் வன்னிக்கு மட்டுமல்லாது இன்று முழு நாட்டு முஸ்லிம்களுக்கும் அரசியல் ரீதியான தலைமைத்துவத்தை வழங்கி வருவது அரசியல் ரீதியில் பின்டைவினை சந்தித்த பிற்போக்கு சக்திகளினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,இதனால் அவர் செய்யும் பணிகளை விமர்சிப்பது மட்டுமல்லாமல் அவரால் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளை கூட தடுத்து நிறுத்த பிரதேச வாதம் கொண்ட கூட்டமொன்று வெறி பிடித்தவர்களை போன்று செயற்பட்டுவருகின்றது.

வருடா வருடம் அமைச்சர் றிசாத் பதியுதீன் நோன்பு கால மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றார்.அதனை இம்முறையும் அவர் செய்த போது அதற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ அணியில் போட்டியிடும் வன்னி மாவட்டத்தின் அரசியல்வாதியொருவர் தேர்தல் ஆணையாளருக்கு இது தொடர்பிலும் முறைப்பாடு செய்து இந்த வறிய மக்களுக்கு கிடைக்கும் உதவிகளை நிறுத்த முற்பட்டது தொடர்பில் மக்கள் கடும் விசனம் கொண்டுள்ளனர்.

மஹிந்த ராஜபக்ஷ அன்று ஜனாபதியாக வந்திருந்தால்,முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒருசர் குறிப்பிட்டது போன்று வன்னியின் அரசியல் தலைமைத்துவம் இன்று இருந்திருக்குமா என்ற கேள்வி எழுந்து நிற்கும் நிலையில் அதே குட்டைக்குள் சென்று மூழ்கி சேற்று நாற்றத்தை உறிஞ்சிக் கொண்டு அமைச்சர் றிசாத் பதியுதீனை அழிக்க துடிக்கும் அசிங்கத்தனமான அரசியல் செல்லாக்காசுகளுக்கு இந்த தேர்தலில் பேரிடியினை மக்கள் கொடுப்பார்கள் என்பது திண்ணம்.

எது எவ்வாறாக இருந்த போதும் விமர்சனங்களும்,தாக்குதல்களும் அமைச்சர் றிசாத் பதியுதீனை நோக்கி வந்த போதும்,அல்லாஹ்வின் உதவியால் அவை தவிடு பொடிகளாக மாற்றப்பட்டுவருவது அவர்“ மக்களுக்கு செய்துவரும் நேர்மையான பணிக்கான பரிசாகும் .

Published by

One response to “இன்றைய அரசியல் சவால்களுக்கு முகங்கொடுக்கும் கட்சியாக அ.இ.ம.கா. இருக்கிறது”

  1. All rubbish. Rishad may only get 1 seat in Vanni. What are you writing. But perhaps people in Vanni will think twice before voting for rishad.

Leave a comment