ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஆழுத கதை போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் முஸ்லிம்கள் தொடர்பில் கருத்து கூறியிருக்கின்றார்.இன்று திருகோணமலை மாவட்டத்தில் இடம் பெற்ற தமிழரசுக் கட்சியின் பிரசாரக் கூட்டதொன்றில் இந்த முஸ்லிம்களின் எதிர்காலம் மத்திய அரசாங்கத்திடம் இல்லை என்று சொல்லியிருப்பதை வைத்து மேற்சொன்ன பழமொழி ஞாபகத்துக்கு வருகின்றது.
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து புலிகளால் முஸ்லிம் துடைத்தெறியப்பட்ட போதும்,மூதுாரில் இருந்து முஸ்லிம்கள் அதே புலிகளினால் வெளியேற்றப்பட்ட போதும்,மௌனிகளாக இருந்த தமிழ் தேசியம்.இன்று வாய்த்திறக்க ஆரம்பித்தள்ளதன் பின்னணி என்னெவென்று அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
இந்த முஸ்லிம்களது வெளியேற்றத்தின் போதும்,அவர்களது மீள்குடியேற்றத்தின் போதும் வாய்த்திறக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று இலங்கை அரசியலில் பேரம் பேசும் சக்தியாக மாறிவரும் 20 இலட்சம் முஸ்லிம்கள் தொடர்பில் எந்த முகத்துடன் முஸ்லிம்களை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணையுமாறு அழைப்புவிடுக்க முடியும்.
வடக்கில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மக்களது மீள்குடியேற்றத்தினை தடுத்து நிறுத்தினர்.முஸ்லிம்கள் காணிகளை அபகரிப்பதாக கூக்குரலிட்டனர்.இந்திய அரசு யுத்தப் பாதிப்புக்களை சந்தித்த மக்களுக்கு வீடுகளை வழங்கிய போது அதனை முஸ்லிம்கள் அனுபவிக்கின்றார்கள் என்று பொய்யான பிரசாரங்களை சர்வதேசத்துக்கு கொண்டு சென்று இந்த மக்களின் மனவலியில் ஆறுதல் அடைந்த இந்த தமிழ் தேசியத்தின் செயற்பாடுகள் எந்த வகையிலும் முஸ்லிம்கள் மத்தியில் நம்பகத்தன்மையினை ஏற்படுத்தாது.
அண்மைய நிகழ்வான வில்பத்து சம்பவம் தொடர்பில் தமிழ் மக்களின் தலைவரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக அறிக்கையொன்றினை விட்டிருந்த போதும்,இந்த தமிழ் தேசியம் எந்தவித ஆக்க பூர்வமான உதவிகளையும் செய்யாது,முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக செயற்பட்டதை மறந்து பேச முடியுமா? என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேட்கவிரும்புகின்றோம்.
வடக்கில் ஆட்சியினை கைப்பற்றி மாகாண சபையின் அதிகாரம் பெறப்பட்டு 2 வருடங்கள் கழிந்த நிலையில் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் எடுத்த நடவடிக்கையென்ன என்பதை விட முஸ்லிம்களுக்குள் பிளவினை ஏற்படுத்த எடுக்கப்பட்ட சதிகள் எத்தனை என்பதை நாம் பட்டியிலிட்டு காட்ட முடியும்,
வடக்கில் தமிழ் மக்களது காணிகளை அரச படைகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்கு மத்திய அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனை பயன்படுத்த முடியுமென்றால் ,ஏன் அதே சவாமி நாதனை வைத்து எரிந்து கொண்டிருக்கின்ற வடக்கு முஸ்லிம்களின் காணிகள் தொடர்பில் பேசியிருக்கவில்லை ?
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முஸ்லிம்கள் இணைவது என்பது அல்லது ஆதரவு வழங்குவது என்பது முஸ்லிம்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு சமமாகும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிந்து கொள்ள வேண்டும்.கறிக்கு பயன்படுத்தும் கறிவேப்பிலையாக இனிமேலும் இந்த முஸ்லிம் சமூகம் இருக்கப் போவதில்லை.
இந்த நாட்டில் ஆட்சி அதிகாரங்களை தீர்மாணிக்கும் பலம் வாய்ந்த சக்தியாக முஸ்லிம்கள் இன்று மாறிவருவது,தமிழ் தேசியத்திற்கு பெரும் சவாலாக மாறிய நிலையில் இன்று முஸ்லிம்களின் உதவி தமிழ் தேசியத்துக்கு தேவைப்படுகின்றது என்பதை இரா.சம்பந்தன் இன்று திருகோணமலையில் இடம் பெற்ற கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கூறியிருப்பதில் இருந்து தெரியவருகின்றது.
மனிதன் தமது மானத்தை மறைக்கவே ஆடையினை அணிகின்றேன்.அந்த மானத்தை இல்லாமல் ஆக்கிய தமிழ் தேசியத்தின் அடையினை அணிவதை விட நிர்வாணமாக இருப்பது தான் உடலுக்கு ஆரோக்கியம் என்பதை தமிழ் தேசியம் புரிந்து கொள்ள வேண்டும்.
Published by

Leave a comment