ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெருநாள் கார் குண்டுத் தாக்குதலில் 120 பேர் பலி

iraqபக்தாத்: கிழக்கு ஈராக்கில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 120 பேர் பலியாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமையன்று ஒரு சந்தைப் பகுதியில் இந்தக் குண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 130 பேர் காயமடைந்திருப்பதாக தியாலா மாகாண கவுன்சில் தெரிவித்துள்ளது.

தியாலா மாகாணத்தில் உள்ள கான் பனி ஷாத் நகரில் ரமலான் முடிவையொட்டி மக்கள் பெரும் அளவில் சந்தைக்கு வந்திருந்தபோது இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

iraq

இந்தக் குண்டு தாக்குதலின் விளைவாக பல கட்டடங்கள் தரைமட்டமாயின. இந்தத் தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக இஸ்லாமிய அரசு தீவிரவாதக் குழு தெரிவித்திருக்கிறது.

Published by

Leave a comment