சமையல் எரிவாயுக் கசிவு: வீடு தீயினால் முற்றாக சேதம்

unnamed2பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி- 03, பழைய விதானையார் வீதியிலுள்ள வீடொன்றில் சமையல் எரிவாயுக் கசிவின் காரணமாக ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

இன்று (17) நன்பகல் 12.15 மணியலவில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றிலிருந்து எரிவாயு கசிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயினால் வீட்டின் கூரையும், ஓடும் தூக்கி வீசப்பட்டுள்ளது. விட்டிலிருந்த பொருட்கள் பல எரிந்துள்ளது.

குறித்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேறியதால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என வீட்டின் உரிமையாளர் கூறினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment