சலீம் மற்றும் கலீல் ஆகியோருக்கு NFGG ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது

NFGG-LogoNFGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ். சலீம் (நூரி புத்தகக் கடை உரிமையாளர்) மற்றும் மணல் வியாபாரியான எம்.கலீல் ஆகியோரது திடீர் மரணச்செய்தி கேட்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மிகுந்த கவலையடைகிறது.

சலீம் அவர்கள் எல்லோரோடும் அன்பாக பழகுகின்ற சுபாவமுடையவர். சமூக சேவையிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அவரினதும் கலீல் அவர்களினதும் மறுமை நல்வாழ்வுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பிரார்த்திக்கின்றது.

இவர்களின் மரணத்தினால் துயருற்றிருக்கும் அன்னவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களின் துயரிலும் பங்கேற்றுக் கொள்கின்றது.

Published by

Leave a comment