காத்தான்குடி தௌஹீத் வாதிகளின் வியத்தகு பெருநாள் திடல் நான்கு!

eid prayerகாத்தான்குடி: குறிப்பாக 2000ம் ஆண்டிற்குப் பின்னர் காத்தான்குடியில் ஏற்பட்ட தௌஹீத் கொள்கையாளர்களின் வளர்ச்சிக்குப் பின், பெருநாள் திடல் ஒன்றாக இருந்து வந்தது. இதன் பின்னர் தௌஹீத் வாதிகளுக்குள் ஏற்பட்ட அரசியல்,மார்க்க, கௌரவ கருத்து முரண்பாடுகளையடுத்து தற்பொழுது பெருநாள் திடல்கள் நான்காக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தவகையில், சர்வதேசப் பிறையின் அடிப்படையில் பெருநாளைக் கொண்டாடும் தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் தாருள் அத்ர் அத்தஹ்வியா ஆகிய தௌஹீத் இயக்கங்கள் வெ வ் வேறாக தங்களது பெருநாள் திடலை அமைத்து வருகின்றனர்.

eid ul alha 2014

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதையே இஸ்லாம் எடுத்துக்கூறுவதாகவும், அதற்கான ஆதாரபூர்வமான குர்ஆன், ஹதீஸ் வசனங்களை எடுத்துக் கூறியும் இவ்வியக்கங்கள் ஆரம்பத்திலிருந்து இன்றுவரைக்கும் நோன்பு மற்றும் பெருநாள் தினங்களை கடைப்பிடித்து வருகின்றன.

உலக முஸ்லிம்கள் ஒரே தினத்தில் பெருநாள் கொண்டாட வேண்டும் என எதிர்பார்க்கும் இவ்வியக்கங்கள், தாங்களே முதலில் ஒற்றுமைப்பட முடியாத அளவுக்கு இஸ்லாத்தை அற்ப வரட்டுக் கௌரவங்களுக்காக விற்கின்றனர்.

ஈராக்கில் நிலவும் சியா, சுன்னி போல் இவ்வியக்க உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பழிதீர்க்கும் அளவுக்கு வந்துவிட்டனரோ என என்னத்தோன்றுகிறது.

“பெருநாள் திடலில்கூட ஒன்றாக சேர முடியாத இவ்விரு இயக்கங்களுக்கு தௌஹீத் எதற்கு?” என மக்கள் நகைப்புடன் கேட்கின்றனர்.

இதேபோல் உள்ளுர் பிறையடிப்படையில் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் மற்றும் சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் ஆகியோரும் பெருநாள் திடல்கைள ஏற்பாடு செய்கின்றனர்.

உள்ளுர் பிறை தௌஹீத் வாதிகளும் ஒரே பெருநாள் திடலில் தொழ முடியாமல் அவர்களது குரோதங்களும், வரட்டுக் கௌரவங்களும் இடங்கொடுக்காமையால், உள்ளுர் பிறை தௌஹீத் வாதிகளின் பெருநாள் திடல்களும் இரண்டாக அமைகிறது.

eid prayer

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையில் மேற்கூறப்பட்ட நான்கு இயக்கங்களும் தாங்கள் ஒரே கொள்கையில் இருப்பதாகவே வெளிப்படையாகக் கூறிக்கொண்டாலும், இவர்களுக்கிடையில் பழிவாங்கும் என்னங்களும், ஒற்றுமையில்லாத குணாதிசயங்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

இவ்வாறான பரிதாப நிலையில் காத்தான்குடி தௌஹீத்வாதிகளின் நிலை இருக்கும்போது, உலக முஸ்லிம்களின் ஒற்றுமை பெருநாள் பற்றி சர்வதேசப் பிறை தௌஹீத் இயக்கங்களும், உள்ளுர் ஒற்றுமை பற்றி லோகல் பிறை தௌஹீத் இயக்கங்களும் கதைப்பதற்கு அருகதையற்றவர்கள்.

சர்வதேசப் பிறை அடிப்படையிலும், லோக்கல் அடிப்படையிலும் காத்தான்குடியில் ஒரே தினத்தில் பெருநாள் கொண்டாடப்பட்டால் துரதிஷ்டமாக 4 பெருநாள் திடல்கள் ஒரே பெருநாள் தினத்தில் அமையும் பரிதாபமும், சுன்னாஹ்வை மீறும் செயலும் இடம்பெறும்.

நபி (ஸல்) அவர்கள் மதீனா நகரிலேயே ஒரே ஒரு பெருநாள் திடலையே ஏற்பாடு செய்து, பெருநாள் தொழுகையை நிறைவேற்றிவந்தார்கள்.

ஆனால் சுன்னாஹ்வைக் கடைப்பிடிக்க வெளிக்கிடும் காத்தான்குடி தௌஹீத்வாதிகளின் இத்தகைய இரண்டோ அல்லது நான்கு திடல்கள் சுன்னாஹ்வுக்கு முரணாக அமைகின்றது.

ஊருக்கு உபதேசிப்பதற்கு முன்னர் தங்களைத் திருத்தி, முதலில் நீங்கள் அனைவரும் ஒற்றுமைப்படுங்கள்.

“ஈத் முபாறக்”

நன்றி,

யுவர் காத்தான்குடிக்காக,

இஸ்மத் ஏ. லாபீர், காத்தான்குடி

Published by

2 responses to “காத்தான்குடி தௌஹீத் வாதிகளின் வியத்தகு பெருநாள் திடல் நான்கு!”

  1. நியாயமான கருத்துக்கள். பாராட்டப்படவேண்டிய எழுத்தாளர்.
    ஆக்கத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் சம்பந்தப்பட்ட அமைப்பினர்கள் விளக்கமளிக்க முன்வருவார்களா?

  2. innum pala pirivuhalaha piriya vaalthukkal
    pakkuvam illamal verum pechu aatralai kondu islam valarka mudyuma

Leave a reply to Niyas Cancel reply