இன்று காலை16 சகோதரர் கலீல் அவர்களது திடீர் மரணச்செய்தி அறிந்து; நாம் மிகுந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்தோம் என உன்னிச்சை இரு நூறுவில் முஸ்லிம் நலன்புரிச்சங்க பிரதித்தலைவர் இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.
சகோதரர் கலீல் உன்னிச்சை இரு நூறுவில் முகீதின் ஜூம்ஆப்பள்ளி பள்ளிவாயலின் பொருளாளராக இருந்து இப்பிரதேச ஏழை மக்களது நலனுக்காக பணியாற்றினார் இதனால் அன்னாருக்கு இம்மக்களது சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொளவதோடு
அவரது இழப்பில் துயருற்று இருக்கின்ற குடும்ப உறவினர்களோடு நாமும் துயரில் இணைந்து கொள்வதுடன் அன்னாரது மறுமை வாழ்வுக்காகவும்; பிரார்திக்கின்றோம் இவரோடு மறணமடைந்த முன்னாள் நகரசபை உறுப்பினர் நூரி சலீம் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என அவர்மேலும் தெரிவித்தார்.
Leave a comment