சாய்ந்தமருது: சாய்ந்தமருது சுதந்திர சமூக அபிவிருத்தி அமைப்பினால் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் என்.எம்.ஏ.ஜஃபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செயலாளர் எம்.ஏ.பைசால், பிரதித் தலைவர் ஏ.ஆர்.எம்.அஸீம், உறுப்பினர்களான ஏ.சீ.ஏ.நஜீம், எம்.சஹாப்தீன் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அமைப்பின் நிர்வாகத்தினரால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
Published by


Leave a comment