காத்தான்குடி: கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, மஹிந்த கம்பனியிடம் பல சுகங்களைப் பெற்றதற்காக, இலங்கை முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மஹிந்தவை எதிர்த்த போதிலும், மஹிந்தவுக்கு கவி பாடி, புகழ்பாடி மஹிந்த புராணம் பள்ளிவாயல்களிலும் பாராயணம் செய்து வைத்த மண்ணின் மைந்தன் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மைத்திரியை வசைபாடி வந்ததை மக்கள் மறக்காமலில்லை.
ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவை ஆதரித்தோர் மீது கொலை அச்சுறுத்தல் விடுத்து, கைக்குண்டுகளை வீசியது மாத்திரமல்லாது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் அலுவலகத்தையும் உடைத்துத் தகர்த்த பெருமை மண்ணின் மைந்தன் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் அவரது ‘கம்பனி’க்கும் உரியதாக இருந்ததை அன்று பலராலும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
மைத்திரி பற்றி ஹிஸ்புல்லாஹ் (காணொளியைக் காண இங்கே சொடுக்குக)
மாதங்கள் 6 கடக்கையில் தேர்தல் வந்தது. பாரளுமன்ற நப்பாசைக்காக ஜனாதிபதி மைத்திரியை அன்று கவிஞர்களைக் கொண்டு வசைபாடிய ஹிஸ்புல்லாஹ் ‘கம்பனி’, இன்று ஜனாதிபதி மைத்திரியை புகழ்பாடுகிறது.
இதேபோல், காத்தான்குடியில் தாக்குப்பிடிக்க முடியாமல், தேசிய ரீதியில் அரசியல் களமொன்றை அமைத்து, யாரையாவது பிடித்து, பாராளுமன்ற ஆசனத்தில் ஒரு நாளாவது அமர்வதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தற்பொழுது தேர்தலில் குதித்திருக்கிறது.
இப்போது தேசிய முன்னணி என்ற பெயரில் கட்சி, மாற்றம் பெற்றிருந்தாலும், அடிப்படையில் மக்கள் இயக்கமாகவே இருந்த 2012 மாகாண சபைத் தேர்தல்களில், ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை தூற்றிவந்த தற்போதய நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர்கள், இன்று தேசிய முன்னணி என்ற போர்வையில் அன்று தூற்றிய முஸ்லிம் காங்கிரஸூடன் நாகூசாமல் ஒன்றிணைந்திருக்கின்றனர்.
என்னைப் பொருத்தமட்டில் இவர்கள் எவரும் சுத்தமானவர்கள் இல்லை என்பதைதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறேன்.
காத்தான்குடி அரசியலைப் பொருத்தமட்டில் ரோசம், மானமற்ற அரசியல் செயற்பாடுகள் 1989 இல் இருந்து மண்ணில் விதைக்கப்பட்டு வருகிறது.
நோன்பின் இறுதிப்பத்தின் இறுதித்தறுவாயைக் கருத்திற்கொண்டு சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்.
யுவர் காத்தான்குடிக்காக,
இர்சாத் ஏ. காதர், காத்தான்குடி
Published by



Leave a comment