கொழும்பு: 12.5 கிலோ கிராம் கொண்ட கேஸ் (சமையல் எரிவாயு) சிலிண்டரின் விலை நாளை மறுதினம் 15ம் திகதி நள்ளிரவு முதல் நூறு ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய அந்த கொள்ளளவு கொண்ட கேஸ் சிலிண்டரின் புதிய விலை 1496 ஆகும்.
சதொச மூலம் விற்பனை செய்யப்படுகின்ற ஒரு கிலோ பச்சரிசி மற்றும் நாட்டரிசியின் உத்தரவாத விலை 60 ரூபாவாகும், ஒரு கிலோ பொன்னிச்சம்பாவின் உத்தரவாத விலை 69 ரூபாவாகவும் குறைக்கப் பட்டுள்ளது. இந்த விலை குறைப்புகள் நாளை மறுதினம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு கெம்பில் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சம் மேளனத்தில் அவர் இதனை தெரிவித்தார். கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு எதிர்வரும் 24ம் திகதி 20 இலட்சம் ரூபா வீதம் நஷ்டஈடு வழங்கல் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறிய அமைச்சர், ஓகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதிய முரண்பாட்டு கொடுப்பனவை செலுத்த 2100 கோடி ரூபா ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் அங்கு தெரிவித்தார்.
Published by

Leave a comment