கொழும்பு: நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களது முழுமையான ஆதரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்குமென அக்கட்சியினதும், அக்கட்சியுடன் கூட்டு வைத்துப் போட்டியிடும் சிறுபான்மைக் கட்சிகளினதும் வேட்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வேட்புமனுப் பத்திரங்களில் கைச்சாத்திட்ட பின்னர் அவர்களில் பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
சிறுபான்மை மக்கள், தாம் எதிர்நோக்கும் சகலவிதமாக பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக் கூடிய தலைவராக ரணில் விக்கிரமசிங்கவையே நம்பிக்கையுடன் எதிர் கொள்வதாகவும், கடந்த ஆறு மாத காலத்தில் அவர் பிரதமராக பதவி வகித்துப்பலவற்றைச் செயலில் காட்டி அம்மக்களது மனங்களை வெற்றி கொண்டுள்ளதாகவும் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சிதேர்தலில் பெருவெற்றி பெறுவதுடன் அதன் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த அரசாங்கத்தை அமைப்பதுடன் அதன் பிரதமராகவும் தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தது போன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்து தேசிய அரசாங்கத்தை நிறுவி நாட்டை சகல துறைகளிலும் முன்னேற்றம் காண வைப்பார் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கடந்த ஆறு வருடங்களாகத் திறந்த வெளிச் சிறைக் கைதிகள் போன்று வாழ்ந்து வந்த தமிழ் மக்களைப் பெரிதும் ஆற்றுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததுடன், அம்மக்களின் முடக்கப்பட்டிருந்த காணிகளை விடுவித்து பல்வேறு நிவாரணங்களையும் வழங்கி உள ரீதியாக அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளதாக தமிழ் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று கடந்த ஆட்சியில்தாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் பிரதேசங்கள்தொடர்பாகவிசாரணை நடத்தி எதிர்காலத்தில் இந்நாட்டில் முஸ்லிம்கள் பயமின்றி வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், அம்மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளையும் கண்டுள்ளதாக ஐ.தே.க. வில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மலையக மக்களின் வாழ்வில் கேள்விக் குறியாக இருந்து வந்த சொந்த வீட்டுக் கனவை குறுகிய தனது பதவிக் காலத்திலேயே ஆரம்பித்து வைத்து அம்மக்களின் மனங்களில் நீங்காதவொரு இடத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளமையால் அவருக்கு ஒட்டு மொத்த மலையக வாக்குகளும் நிச்சயம் கிடைக்கும் என மேல், மத்திய, ஊவா மாகாணங்களில் போட்டியிடும் தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
உள ரீதியாக அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளதாக தமிழ் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று கடந்த ஆட்சியில்தாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் பிரதேசங்கள்தொடர்பாகவிசாரணை நடத்தி எதிர்காலத்தில் இந்நாட்டில் முஸ்லிம்கள் பயமின்றி வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், அம்மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளையும் கண்டுள்ளதாக ஐ.தே.க. வில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மலையக மக்களின் வாழ்வில் கேள்விக் குறியாக இருந்து வந்த சொந்த வீட்டுக் கனவை குறுகிய தனது பதவிக் காலத்திலேயே ஆரம்பித்து வைத்து அம்மக்களின் மனங்களில் நீங்காதவொரு இடத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளமையால் அவருக்கு ஒட்டு மொத்த மலையக வாக்குகளும் நிச்சயம் கிடைக்கும் என மேல், மத்திய, ஊவா மாகாணங்களில் போட்டியிடும் தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
Published by

Leave a comment