கணவன் : நோன்பு 20வதும் பெய்த்து நீ எப்பதான் உடுப்பெடுக்கப்போறாய் ???
மனைவி : இன்னும் புது டிசைன் ஒன்டும் வரல்லயாம் பிறகு பாப்பம்
கணவன்: இல்ல புள்ள….. புது புது டிசைன் எல்லாம் வந்து கிடக்காம் நம்மட மெளலவிட கடைல
மனைவி : சரி, புது டிசைன் என்டாத்தான் எடுக்குற, சரியா!
கணவன் : சரி வாவன்தாங் போய் பாப்பம்
கடையில் …….
கணவன் : பெருநாளைக்கு புதுசா ஏதும் அபாயா டிசைன் வந்திருக்கா மெளலவி!
கடை வியாபாரி (மெளலவி) : ஒ ! இந்தா கிடக்கு நேத்துராவுதான் டுபாய் ல இருந்து வந்த புது டிசைன் அபாயா பண்டல்.
மெளலவி : இப்பதான் உடச்ச உங்களுக்குதான் முதல் முதலா காட்டுரன்
கணவன் : பார்த்து எடு புள்ள எல்லாம் புது டிசைனாம்
மனைவி : எனக்கென்டா இதுல ஒன்டுமே பிடிக்கல
உடம்பு ,கை எல்லாம் தள தள வென்டு பெரிச கிடக்குமனைவி : உங்கட உம்மாக்கு வேனுமென்டா இதுல எடுத்து குடுங்க அவைக்கு தான் சரி இது
(கணவனும் மெளலவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க…….)
மெளலவி : இல்ல புள்ள! இந்த முறை வந்து இருக்குற Fashion & Tite மொடல் இதுதான்
மனைவி: ம். ஹ்ம் .. நான் செல்லிட்டன் இதுக்குதான் நான் சென்ன பஜ்ஜிரியாட தைப்பமென்டு
மனைவி : அவள்ற வீட்ட போவம் அவள் நல்ல துணியும் வெச்சிரிப்பாள் அவள்ட தச்சி பேட்டாதான் அபாயா போட்டா போல இருக்கும்
மனைவி : அவள்தான் சொக்ஸ் கையும் வெச்சி, ஒட்டினாப்போல உடம்பும் வெச்சி அந்தமாதிரி தைப்பாள்
கணவன் : இவ்வளவு புதுசுலயும் உனக்கு ஒன்டும் பிடிக்கல்லாட்டி
இதுக்கு பிறகு உனக்கு பின்னால அலைய எனக்கு நேரம் இல்ல…மனைவி: அப்ப .., இப்படி ஒரு அபாயா போட்டு நான் இந்த பெருநாள் கொன்டாடமாட்டன். சைக்கிள எடுங்க வீட்ட போக
கணவன் :(வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் …..
Published by

Leave a comment