ஊர்வலங்கள் பேரணிகளுக்கு முற்றாகத் தடை: மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை

Welegedara police kkyஎம்.ஐ.அப்துல் நஸார்

காத்தான்குடி: ஊர்வலங்கள் பேரணிகளுக்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில், ஊர்வலங்களை நடாத்துபவர்கள் மற்றும் அதனை ஒழுங்கு செய்பவர்கள் மீது தராதரம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரினால் பொலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஊர்வலங்களை நடத்துபவர்கள் மற்றும் அதில் பங்குபற்றுவோரில் தகவல்களை திரட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவுறுத்தலை மீறி ஊர்வலங்களை நடத்தப்படுமானால் அதனை தடுப்பதற்கு பொலீஸாரால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி இவ்வாறான தேர்தல் சட்டவிதிகளை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தேர்தல் சட்டத்தை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகiயும் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாளை திங்கட்கிழமை (13) வேட்புமனுத் தாக்கல் செய்யும் இறுதித் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment