ஸ்ரெப்ரனீட்சா: இரண்டாம் உலகப் போர் காலத்து யூத இனப்படுகொலைக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான ஸ்ரெப்ரனீட்சா படுகொலைகளின் இருபதாவது ஆண்டு நிறைவை நினைவுகூர்வதற்காக பொஸ்னியாவில் உள்ள ஸ்ரெப்ரனீட்சா நகரில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர்.
ஐநா படைகளின் பாதுகாப்பில் அந்நேரம் இருந்திருக்க வேண்டிய அந்த இடத்தை பொஸ்னிய செர்பியப் படைகள் தாக்கி, அங்கிருந்த முஸ்லிம் ஆண்களும் சிறுவர்களுமாக எட்டாயிரம் பேரைக் கொன்றிருந்தது.
இந்த நினைவுச் சடங்கின் கடைசியில், 130 பேருக்கு இறுதிச் சடங்குகள் நடக்கவுள்ளன.
அண்மையில் மரபணுப் பரிசோதனைகளின் மூலமாக இவர்களது எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
நினைவுச் சடங்கில் கலந்துகொள்கின்ற சர்வதேச பிரமுகர்களில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனும் அடங்குவார்.
அந்தக் கொலைகள் ‘ஒரு கொடூரமான குற்றம்’ என வர்ணித்து கண்டிக்கும் ஒரு அறிக்கையை தற்போதைய செர்பியப் பிரதமர் அலெக்ஸாந்தர் வுசிச் வெளியிட்டிருந்தார்.

Leave a comment