“இம்மாதம் 15 திகதி தொடக்கம் அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்”: ஐ.தே.க. மாநாட்டில் ரவி

unp– இர்ஷாத் றஹ்மத்துல்லா

கொழும்பு: இம்மாதம் 15 திகதி தொடக்கம் அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க தெரிவித்தார்.பச்ச அரிசி 60 ரூபாவாகவும்,சமையல் எரிவாயு 100 ரூபாவாலும் குறைக்கப்படும் என்றும் இன்று அவர் அறிவித்தார்.

ஜக்கிய தேசிய கட்சியின் மாநாடு இன்று கொழும்பு கெம்பல் பிட்டி மைதானத்தில் இடம் பெற்ற போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெற்ற இந்த மாநாட்டில் ஜக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்கள் பல்லாயிரணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நிதி அமைச்சர் ரவி கருனநாயக்க தமதுரையின் போது கூறியதாவது-

unp

கடந்த மஹிந்த ராஜபக்ஷவி்ன் ஆட்சியில் வீண் செலவுகள் அதிகமாக இந்தன.இதனால் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு செய்யப்பட்டு அவற்றை நிவர்த்திக்கும் வகையில் மக்களை கசங்கி பிழிந்தனர்.வறுமையும்,பட்டினியும் நாட்டில் காணப்பட்டது.அபிவிருத்தி எனற் போர்வையில் ஊழல்களே இடம் பெற்றன.

இந்த ஆட்சியினை மாற்ற வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்பினர்,இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டது.அதனோடு மட்டுமல்லாமல் 100 நாள் வேலைத்திட்டத்திற்குள் எமது கட்சி எதனை மக்களுக்கு வாக்குறுதிகளாக அளித்ததோ அதனை செய்தது.பொருட்களை விலை குறபை்பு மட்டுமல்லாது அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு என்பனவற்றை வழங்கியது.

மக்களின் நலன்குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் புதிய ஆட்சியில் மகிவும் தெளிவான பொருளாதார கொள்கையுடன் எம்மால் செயற்பட முடிந்தது,இலங்கைக்கு புதிய முதலீடுகளை அடையாளப்படுத்தியுள்ளோம்.ஆனால் தற்போதைய சிறுபான்மை அதிகார1ங்களை கொண்ட அரசாங்கத்தில் அதனை நடை முறபை்படுத்த முற்பட்ட போது எதிர்கட்சி அரசியல் வாதிகள் பல்வேறுப்பட்ட இடைஞ்சல்களை ஏற்படுத்தினார்கள்..

unp

அதனால் தான் பெரும்பான்மை 2/3 அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தை உருவாக்கும் தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.அதனை நாம் எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஏற்படுத்துவோம்.

சர்வதிகார போக்குடன் அதிகாரத்தை வைத்து தமக்கு தெவையானவற்றை செய்த மஹிந்த ராஜபக்ஷ,அவரினால் நெிறைவேற்றப்பட்ட அதிகாரத்தை மீண்டும் பாராளுமனறத்துக்கு பதில் 4றும் அதிகாரமாக மாற்றுவதற்கான பணியினை செய்யக் கூடிய அதிகாரத்தை பிரதமரும்,எமது கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அவர்களினால் 19 வது திருத்த சட்ட மூலத்தினை நடை முறைப்படுத்த முடிந்தது.இதுவே ஒரு பெறுவெற்றியாகும் என்பதை கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.

கொழும்பில் 19 தொகுதிகள் உள்ளன.அந்த 19 ல் 15 தொகுதிகளை ஜக்கிய தேசிய கட்சி வெற்றி கொள்ளும் என்ற உத்தரவாதத்தை இங்கு தரவிரும்புகின்றேன் என தெரிவித்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சியினை மீண்டும் உருவாக்கி இந்த நாட்டில் கசல மக்களும் சமமாக வாழும் உரிமையினை ஏற்படுத்துவோம் என்றும் கூறினார்

Published by

Leave a comment