புத்தளம்: எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக முன்னால் வடமேல் மாகாண அமைச்சர் எம்.எச்.எம்.நவவி களமிறங்குகின்றார்.நீண்ட காலமாக அரசியலில் ஓய்வு பெற்றிருந்த நவவி, புத்தளம் மாவட்ட மக்கள் மத்தியில் மதிப்பும்,மறியாதையும் கொண்ட ஒருவராக இருந்து வந்தார்.
புத்தளம் நகர சபையின் உறுப்பினராக,எதிர்கட்சி தலைவராக அரசியலை ஆரம்பித்த நவவி அதன் பிற்பாடு வடமேல் மாகாண சபையின் சுகாதார,சுதேச வைத்திய மற்றும் பெருந்தெருக்கல் ,போக்குவரத்து சுற்றாடல் அமைச்சராக பணியாற்றிவந்துள்ளார்.
கடந்த இரு பாராளுமன்ற தேர்தல்களில் பொதுஜன ஜக்கிய முன்னணியில் போட்டியிட்ட போதும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக்கொள்ள முடியாது போனது.
இந்த நிலையில் முன்னால் அமைச்சர் எம்.எச்.எம்.நவவியின் அரசியல் பிரவேசம் புத்தளம் மக்களுக்கு தேவையாக இருந்ததினால் அவர் புத்தளம் மாவட்டத்தின் ஏகோபித்த மக்களின் விருப்பத்தின் படி ஜக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று கொழும்பு ஜக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் வைத்து நியமனப் பத்திரத்தில் கையொப்பமிட்டார்.
Leave a comment