மதீனா: புனித ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகா.ப் இருப்பது நபி (ஸல்) அவர்களின் பிரதான சுன்னத்துக்களுள் ஒன்றாககவும், அரும்பெரும் பாக்கியங்களைப் பெற்றுக்கொள்ளும் உன்னதமான செயலாகவும் இருந்து வருகிறது.
இந்தவகையில் மஸ்ஜிதுந் நபவியில் 15,000க்கும் அதிகமானவர்கள் இஃதிகாஃப் அமல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஆண்களும் பெண்களும் இஃதிகாஃப் இருந்து வருகின்றனர்.
இஃதிகா.ப் இருக்கும் மக்களுக்காக ஹரம் ஷரீப், அதிகளவான சலுகைகளை வழங்கி வருகிறது. இவர்களுக்கான போர்வைகள், தனிப்பட்ட மலசலகூட வசதிகள், உணவு மற்றும் இதர உதவிகளையும் செய்து வருகிறது.
யாரெல்லாம் இணையத்தளம் மூலமாக முன்பதிவுகளை மேற்கொண்டார்களோ அவர்களுக்கான சலுகைகள் இரட்டிப்பாக அதிகரித்து வழங்கப்படுவதாக மஸ்ஜிதுந் நபவி ஹரம் ஷரீஃப் நிர்வாகம் கூறுகிறது.
ஹரத்திற்குள் 24 மணிநேரமும் குளிரேற்றி இயங்குவதால், கம்பளி போர்வைகள் இஃதிகாஃப் இருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மக்கா ஹரத்திலும் இவ்வாறான வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், குடும்பத்தினருக்கான இஃதிகாஃப் வசதிகள் ஹரத்தில் ஒழுங்கு செய்ய முடியாது எனது ஹரம் நிர்வாகம் கூறுகிறது.
இதைவிட, றியாத்தில் அல் ராஜி பள்ளிவாயலிலும், மன்னர் ஹாலித் பள்ளிவாயலிலும் ஆண்கள், பெண்களுக்கான இஃதிகாஃப் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காத்தான்குடியிலும் பிரதான ஜூம்ஆ பள்ளிவாயல்களில் இஃதிகாஃப் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
1985ம் ஆண்டிலிருந்து காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீனில் ஆரம்பிக்கப்பட்ட இஃதிகாஃப், இன்று இலங்கையில் பல பாகங்களிலும் மிகச்சிறப்பாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment