ஜனநாயகத்தை பாதுகாக்க தன்னை அர்ப்பணித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க

ranilகொழும்பு: எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையெழுத் திட்ட கையோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்த முதல் நடவடிக்கை தனது உருவத்துடன் கூடிய சகல கட்அவுட்கள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தனது செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார்.

முக்கியமாக 100 நாள் வேலைத்திட்டத் தின் முன்னேற்றம் தொடர்பான கட் அவுட்களில் ஜனாதிபதியின் படத்துடன் தனது படமும் உள்வாங்கப்பட்டுள்ளது. அதனையும் சேர்த்து தனது படம் தாங்கிய அனைத்து கட்அவுட்கள், சுவரொட்டிகளை வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என பிரதமர் ரணில் வலி யுறுத்தி இருக்கின்றார்.

எமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண் மைக்காலமாக தெரிவித்து வந்துள்ளார். எதிரும் புதிருமான கட்சி அரசியலுக்குப் பதிலாக இணக்க அரசியலை நடத்தி முன்னுதாரணத்தைக் காட்ட வேண்டுமென்ற நீண்ட நாளைய கனவை நனவாக்க வேண் டுமென்பது பிரதமர் ரணிலின் இலட்சிய மாகக் காணப்படுகின்றது.

கட்சியில் தான் எதிர்கொண்ட அனை த்துச் சவால்களையும் முறியடித்து கட் சியை ஒன்றுபடுத்திய பிரதமர் அதனை விவேகமாகக் கையாண்டு புதிய அரசியல் பாதைக்கான வியூகத்தை அமைத்துக் கொண்டார்.

எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் கட்சியை பலவீனப் படுத்தும் திட்டங்கள் திரைமறைவில் இடம்பெற்ற போதெல்லாம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து புத்திசாதுரியமாக செயலில் இறங்கி ஐக்கிய தேசியக் கட்சி துண்டாடப்படுவதை தடு த்துநிறுத்தி அதனை பலமுள் ளதாக கட்டியெழுப்புவதிலும் வெற்றிகண்டார்.

maithiri ranil fowzi ifthar

ஒரு கட்டத்தில் கட்சிக்குள்ளி ருந்தே அவருக்கு கடும் எதிர் ப்பு தலை தூக்கியது. தலை மைத்துவத்திலிருந்து அவரை வெளியேற்றும் சதித்திட்டங் கள் கூட மேற்கெள்ளப்பட்டன. சிலர் அவரை ஜனநாயக விரோதி என்று கூடக் கூற முற் பட்டனர். இவ்வாறான பூச்சாண் டித்தனங்களைக் கண்டு பயந்து ஒதுங்காமல் உறுதியான நிலை ப்பாட்டை எடுத்து அனைத்து சதிகளையும் முறியடித்து வெற் றிப் பாதையில் கட்சியை பிர வேசிக்கச் செய்தார். அன்று கட்சிக்குள்ளிருந்து தூற்றியவர்களே இன்று புகழாரம் சூட்டத் தொட ங்கியுள்ளனர்.

ரணில் சில சந்தர்ப்பங்களில் எடுக் கும் முடிவுகள், தீர்மானங்கள் சர்வாதி காரப் போக்கு போன்று தென்படலாம். ஆனால் யதார்த்தம் அதுவல்ல. அவ்வாறான முடிவுகள், தீர்மானங்கள் ஜனநாயகப் பண்புடன் கூடியதாகவே மாற்றம் பெற்று விடுவதைக் காண முடிந்தன.

அன்று எதிரணியில் இருந்தவர்கள் கூட ரணில் கட்சிக்குள் சர்வாதிகாரியாகச் செயற்பட்டுக் கொண்டு ஜனநாயகம் பற்றிப் பேசுவது விந்தையாகி இருப்பதாக விமர்சித்து வந்தனர். ஆனால் அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு துணை போனதை காண முடிவதில்லை. சில வேளைகளில் கடுமையான போக்கில் நடந்து கொண்டாலும் அது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமைய இடமளிக்காமல் பார்த்துக்கொள்வார்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை அன்று ஐ.தே.க. ஆட்சியில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன கொண்டு வந்த போதிலும் பின்னரான காலப்பகுதியில் ஜனநாயக இலங்கைக்கு நிறைவேற்று அதிகார முறை பாதகமானதென கண்ட ரணில் அதனை ஒழிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டார். மஹிந்த ஆட்சியில் நிறைவேற்று அதிகார முறை அதி உச்ச நிலைக்கு மேலோங்கியதோடு சதாகாலமும் சர்வாதிகார ஆட்சி நடத்தும் முயற்சிக்கு பாராளுமன்றத்தில் சில கட்சிகள் துணை போனதால் 2/3 பெரும்பான்மையை பெற்றுக்கொண்டு மஹிந்த நிறைவேற்றிக் கொண்டார்.

RanilWickramasinghe[1]

அன்று முதல் ரணில் ஆரம்பித்த போராட்டம் படிப்படியாகித்தான் வலுவடைய முடிந்தது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதை விட அதனை ஒழிப்பதற்கான நம்பிக்கையாக ஒருவருடன் கைகோர்க்கத் தயாரானார்.

மிகவும் சூட்சுமமாக இதற்கான காரியங்கள் மேற்கொள்ளப்பட்டன. மஹிந்த ராஜபக்ஷ தேர்தலுக்கு செல்லத் தயாரான போது உரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாக விகாராதிபதி மாதுளுவாவே சோபித்த தேரர் மற்றும் ஹெல உறுமய கட்சியின் அத்துரலிய ரத்னதேரோ, பாட்டலி சம்பிக்க ரணவக்க உட்பட பல்வேறு ஜனநாயக சக்திகளையும் அரவணைத்துக் கொண்டு களத்தில் இறங்கினார். இறுதி நேரம் வரை மஹிந்தவை நேருக்கு நேர் எதிர்ப்பவர் யார்? என்ற கேள்விக்கு எவராலும் விடைதேட முடியாதிருந்தது.

பொது வேட்பாளர் ரணிலா அல்லது மாதுளுவாவே சோபிதவா? என்று கூட பரவலாக பேசப்பட்டது. திடீரென ஒரு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் அவசர ஊடக மாநாடு என அறிவிக்கப்பட்டது. பெரும் எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள், கட்சிகளின் ஆதரவாளர்கள் புதிய நகர மண்டபத்தில் அணிதிரண்டனர்.

10 மணி முதல் மாலை 4 மணி வரை எதுவுமே புரியாத நிலையே காணப்பட்டது. மாலை 4.15 ஆகும். போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன், மைத்திரிபால சிறிசேன, டாக்டர் ராஜித சேனாரத்ன உட்பட அரசின் அமைச்சர்கள் சிலர் வந்திறங்கினர். அங்குதான் மைத்திரிபால யுகத்தின் ஆரம்பத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. இந்த மறைமுக நாடகத்தின் சூத்திரதாரியாக இயங்கியவர் ரணில் விக்கிரமசிங்கதான் என்பதை அன்றுதான் அறிந்து கொள்ள முடிந்தது.

சரியான வியூகம் அமைத்து மஹிந்தவுக்கு சவாலாக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்ட போது இரண்டு கட்சிகளிலும் பலத்த சகல சலப்பு ஏற்பட்டது. ஆனால் ரணில் இந்த விடயத்தில் பெரும் தியாகத்தைச் செய்து ஜனநாயகத்தை பாதுகாக்க முன்வந்தார். இதனை மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார்.

ranil subair

ஜனவரியில் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பி மைத்திரிபால அரசு கட்டிலில் இருத்தப்பட்டார். இந்த வரலாற்றுத் திருப்பத்தின் சூத்திரதாரியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே திகழ்கின்றார். நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக திட்டமிட்டுச் செயற்பட்டதன் மூலம் இன்று நாடே பாதுகாக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றொரு தேர்தலுக்கு தயாராகியுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கில் தனது வேட்பாளர் படையை களமிறக்கியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊழல், மோசடிகளுடன் தொடர்பு படாத அரசியல் நேர்மையானவர்களை அடையாளம் கண்டு களமிறக்கத் தயாராகியுள்ளார். அதற்கு முன்மாதிரியாக தானே நடந்து கொள்ளும் வகையில் தனது கட்அவுட்களை அகற்றுமாறும், கட்அவுட்களை போடுவதை தவிர்க்குமாறு கேட்டிருக்கிறார்.

அடுத்த ஐந்தாண்டுக்குரிய நல்லாட்சிக்கான பாரிய பொறுப்பை ஏற்கக் கூடிய அரசை அமைத்துக் கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருகிறார். தனிக்கட்சி ஆட்சிக்குப் பதிலாக எல்லோரையும் ஒன்றிணைத்து தேசிய அரசு எனும் நல்லிணக்க ஆட்சியை ஆகஸ்ட் 17 இல் மலர்ச் செய்ய வேண்டுமென்பதே ரணில் விக்கிரமசிங்கவின் இலக்காகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நல்லெண்ணம் நிறைவேற இலட்சியம் கைகூட ஜனநாயகத்தை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் தன்னோடு கைகோர்க்க வேண்டுமென நாட்டு மக்களிடம் அழைப்பு விடுத்திருக்கிறார். ரணிலின் இலட்சியக் கனவு நிறைவேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

– பிலால், தினகரன்

Published by

Leave a comment