ஐ.தே. கட்சியின் விசேட மாநாடு இன்று

unpகொழும்பு: பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி விஷேட மாநாடொன்றை இன்று சனிக்கிழமை நடத்துகின்றது. கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த விஷேட தேர்தல் மாநாடு நடைபெறுகின்றது.

“கருத்துச் சுதந்திரம், கிட்டிய, மகிழ்ச்சி நிறைந்த நாடு, கைகள் நிரம்பி வழியும் பொருளாதாரம்” எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு தேர்தலை முன்னிட்டு நடைபெறு கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் ஐந்தாண்டுகளில் பத்து இலட்சம் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வேலைத் திட்டம் உட்பட நாட்டை வளமுள்ளதாக கட்டியெழுப்பும் பல்வேறு திட்டங்கள் இன்றைய மாநாட்டின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க முதலீட்டின் மூலம் 60 வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் நிர்மாணிப்பது தொடர்பாகவும் இன்று அறிவிக்கப்பட வுள்ளது.

வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடும். சில பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்றைய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றவிருப்பதாக கட்சி பொதுச் செய லாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

Published by

Leave a comment