ஏறாவூர்: கிழக்கு மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும், பிரதி தவிசாளருமான தற்போதைய கிழக்கு மாகான சபை உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்கள் ” அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளர் பதிவியிலிருந்தும், உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளதாக அவரது ஏறாவூர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஒன்று கூடலில் தெரிவித்தார்.
சுமார் பத்து வருடமாக இக்கட்சிக்காக அயராது உழைத்த இவர் அண்மைக்காலமாக இக்கட்சியின் நடவடிக்கைகளில் அதிருப்தி கண்டு ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் விடயமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது கட்சி சார்பாக யார்,யார் போட்டியிடுவது என்பதுகூட தெரியாத கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருக்க நான் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a comment